வியாழன், 21 டிசம்பர், 2017

​கொச்சி கடல் பகுதியில் தத்தளித்த தமிழக மீனவர்களை மீட்ட சக மீனவர்கள்! December 21, 2017

Image

ஓகி புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கொச்சி கடல் பகுதியில் தத்தளித்துவந்த 47 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கொச்சி துறைமுக பகுதிக்கு அழைத்துவந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளை பகுதியைச் சேர்ந்த 47 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கினர். அதைத்தொடர்ந்து கடலில் சிக்கித்தவித்துவந்த அவர்களைத் தேடி வல்லவிளை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். 
அப்போது, கொச்சி கடல் பகுதியில் தத்தளித்த 47 பேரையும் மீட்ட சக மீனவர்கள் அவர்களை கொச்சி துறைமுகத்திற்கு அழைத்துவந்தனர். இதே போல, நேற்று முன் தினம் இதே மீனவர்கள் 10 மீனவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.

மீனவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையும், இந்திய கப்பற்படையும் முனைப்பு காட்டவில்லை என மீனவர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர். இந்நிலையில் காணமல் போன மீனவர்களை தேடி சக மீனவர்கள் கடலுக்குள் சென்று கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.