பண பலத்தைக் கொண்டே இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை மதுரவாயலில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக பண பலத்தைக் கொண்டே வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டார். வரும் காலங்களில் அக்கட்சி எந்த தேர்தலிலும் வெற்றி பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி இல்லை என குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்கான எடுபுடி ஆட்சிதான் தற்போது நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு கொண்டு வரலாம் என்பது மத்திய அரசின் முடிவுதானே தவிர, சட்டம் அல்ல என்று குறிப்பிட்ட ஸ்டாலின், ஆனால், அதற்குள்ளாகவே, தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
தமிழக மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு தமிழக அரசு இதை அமல்படுத்த முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
credit ns7.tv