ஞாயிறு, 3 நவம்பர், 2019

அமெரிக்காவில் ஹவுதி மோடி.. பாங்காக்கில் சவஸ்தி மோடி!

Image
ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். ‘சவஸ்தி மோடி’ (Sawasdee PM Modi)என்ற நிகழ்ச்சியில் பாங்காக்கில் உள்ள இந்தியர்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்ற இருக்கிறார்.
பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் ‘சவஸ்தி மோடி’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சவஸ்தி என்பது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவிப்பதற்காக தாய்லாந்து மக்கள் பயன்படுத்தும் சொல்லாகும். இது svasti என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து தோன்றியதாகும்.
கடந்த செப்டம்பர் 23ல் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 50,000 இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றிய ஹவுதி மோடி (Howdy Modi) நிகழ்ச்சியை தொடர்ந்து பாங்காக்கிலும் அதே போன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹவுதி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இணைந்து கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது திருக்குறளின் தாய்லாந்து மொழிபெயர்ப்பு நூலை பிரதமர் மோடி வெளியிடுகிறார். மேலும் சீக்கியர்களின் குருவான குருநானக் தேவின் 550வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு காசை பிரதமர் மோடி வெளியிட இருக்கிறார்.
credit ns7.tv