திங்கள், 17 ஜூலை, 2017

ஆன்லைன் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க மத்திய அரசு முயற்சி! July 17, 2017

ஆன்லைன் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க மத்திய அரசு முயற்சி!


ஆன்லைன் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிரிட்டனில் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்கும் சட்டம் உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா பிரிட்டனை நாடியுள்ளது. இது தொடர்பாக இந்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் பிரிட்டன் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோதமான சூதாட்டத்தில் 9.6 லட்சம் கோடி ரூபாய் புழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இதனை அரசுக்கு வருமானமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது தொடர்பான சட்டத்தை வடிவமைக்க இரண்டு ஆண்டுகள் ஆகும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. 

Related Posts: