புதன், 19 ஜூலை, 2017

இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை! July 19, 2017






எல்லையின் சில பகுதிகளில் இந்தியா மோதலை ஊக்குவிக்குவித்தால், அனைத்து பகுதிகளிலும் மோதல் வெடிக்கும் என சீனா எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான குலோபல் டைம்ஸ்-ல் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில், எல்லையை ஒட்டிய சில பகுதிகளில் இந்திய ராணுவம் மோதல் போக்கை ஊக்குவிக்குமானால், அது இரு தரப்பு எல்லை முழுவதும் பரவி, முழு அளவிலான மோதலாக வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பெய்ஜிங்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லூ காங், சீன எல்லைக்குள் நுழைந்துள்ள தனது படையை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இந்த விவகாரத்தில் சீனாவின் கருத்தை இந்தியா புரிந்து கொள்ளும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில், எல்லை தாண்டும் செயலை இந்தியா மேற்கொள்ளக் கூடாது என்றும் லூ காங் குறிப்பிட்டுள்ளார். 

பூட்டானின் டோக்லாம் பகுதிக்குள் நுழைந்துள்ள சீன ராணுவம், அங்கு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. தனது எல்லையைத் தாண்டி பூட்டானுக்குள் நுழைந்து சீன ராணுவம் மேற்கொள்ளும் சாலை அமைக்கும் பணிகளை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. 

இரு தரப்பும் அப்பகுதியில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதனால், சிக்கிம்மை ஒட்டிய சீன எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது.

Related Posts: