புதன், 26 ஜூலை, 2017

கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படப் போகும் 4 கோடி மக்கள்! July 26, 2017




கடல் நீர் மட்டம் உயர்வதன் காரணமாக வரும் 2050ம் ஆண்டுக்குள் 4 கோடி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரச தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மக்களவையில் தாக்கல் செய்த எழுத்துப்பர்வ பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்ட உலக சுற்றுச்சூழல் நிலைமை குறித்த அறிக்கையில், இது கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சுற்றுச்சூழல் தொடர்பான ஐ.நா. அமைப்பில் இந்தியா தாக்கல் செய்த இரண்டாவது தேசிய தகவல் பரிமாற்ற அறிக்கையின்படி, 1990க்கும் 2100க்கும் இடையே, கடல் மட்டத்தின் அளவு 3.5 இன்ச்சில் இருந்து 34.6 இன்ச்சாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

கடல் நீர் மட்டம் உயர்வதன் காரணமாக வரும் 2050ம் ஆண்டுக்குள் 4 கோடி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஹர்ஷ் வர்தன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.