செவ்வாய், 25 ஜூலை, 2017

Microsoft Paint-ன் பயணம் முடிவடைகிறது..! July 24, 2017

மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10-ல் பெயிண்ட் (PAINT) அப்ளிக்கேஷன் இடம்பெறாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், கணினியை முதன்முறையாக பயன்படுத்துபவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு அப்ளிகேஷன் என்றால் அது பெயிண்ட்தான். பெயிண்ட் அப்ளிகேஷனில் வரைந்து (கிறுக்கி ) விளையாடுவது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று. மணிக்கணக்கில் கம்பியூட்டர் முன்பு உட்கார்ந்துகொண்டு தன் கற்பனைகளில் தோன்றியவற்றையெல்லாம் பல வண்ண ஓவியங்களாக வரைந்துபார்த்ததை, 90களில் பிறந்த எவரும் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது. பெயிண்ட் அப்ளிகேஷனுக்காகவே பல வீடுகளிலில் கணினியை கேட்டு சிறுவர்கள் அடம்பிடித்த கதைகள் பல உண்டு. 

1985ல் வெளியான விண்டோஸ் 1.0-வில் முதன்முறையாக பெயிண்ட் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு அடுத்தடுத்த வந்த விண்டோஸ் வெர்ஷன்களில் பல டூல்கள் சேர்க்கப்பட்டு மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டது. பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிலும் பெயிண்ட் அப்ளிகேஷன் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போட்டோஷாப் அப்ளிகேஷனுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியது பெயிண்ட் அப்ளிகேஷன்தான். 

இந்நிலையில், விண்டோஸின் அடுத்த வெர்ஷன் (விண்டோஸ் 10) முதல் பெயிண்ட் அப்ளிகேஷன் இடம்பெறாது என மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் பெயிண்ட் அப்ளிகேஷன் உடனான தங்களுடைய சிறு வயது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். 
 
When you don't have anything to do at work so you remake scenes from anime in MS Paint

I call it 'Neon Genesis MSgelion'

விண்டோஸ் பெயின்ட் அப்ளிகேஷனைக்கொண்டு வரையப்பட்ட தலைசிறந்த 7 ஓவியங்களை கீழே காணலாம்..

1.)


2.)
 

3.)
 

4.)
 

5.)



6.)



7.)



Related Posts: