செவ்வாய், 7 நவம்பர், 2017

400 கோடி நிதியை அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கிக்கொண்டனர் - விஜயகாந்த் குற்றச்சாட்டு November 7, 2017

Image

காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிகரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வார  ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாய் நிதியை மக்களுக்கு ஒதுக்காமல் அமைச்சர்கள் தங்களுக்கே ஒதுக்கிக் கொண்டதாக புகார் தெரிவித்தார். 

மழை பாதிப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் பலவும் அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.