2016ல் தொடங்கப்பட்ட உஜ்வாலா 1.O திட்டத்தின்போது, பிபிஎல் (வறுமைக் கோட்டுக்கு கீழே) குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து கோடி பெண் உறுப்பினர்களுக்கு எல்பிஜி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் ஏப்ரல் 2018ல் விரிவாக்கப்பட்டது. மேலும், இந்த திட்டம் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மற்றும் காடுகளில் வசிக்கும் சமூகத்தினர் போன்ற மேலும் ஏழு பிரிவுகளைச் சேர்ந்த பெண் பயனாளிகளை உள்ளடக்கியது.
இதையடுத்து, இந்த திட்டத்தின் மூலம் மேலும் 8 கோடி எல்பிஜி இணைப்புகளாக அதன் இலக்கு திருத்தி அமைக்கப்பட்டது. இந்த இலக்கு ஆகஸ்ட் 2019ல், திட்டமிடலுக்கு 7 மாதங்களுக்கு முன்னதாக அடையப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்தத் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி எல்பிஜி இணைப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் இந்த ஒரு கோடி கூடுதல் இணைப்புகள் பி.எம்.யு.ஒய் திட்டத்தின் முந்தைய கட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய முடியாத குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாத எல்.பி.ஜி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வைப்புத்தொகை இல்லாத எல்பிஜி இணைப்போடு, உஜ்வாலா 2.0 பயனாளிகளுக்கு முதல் ரீஃபில் மற்றும் ஹாட் பிளேட்டை இலவசமாக வழங்கும். புலம்பெயர்ந்தவர்கள் உஜ்வாலா 2.O திட்டத்தில் பதிவு நடைமுறைக்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆவணங்களை ரேஷன் கார்டு அல்லது முகவரி சான்றை சமர்ப்பிக்க தேவையில்லை.
குடும்ப உறுதிமொழி மற்றும் முகவரி சான்று ஆகிய இரண்டிற்கும் ஒரு சுய அறிவிப்பு போதுமானது என்று அதிகாரிகள் கூறினர்.
உஜ்வாலா 2.O எல்பிஜிக்கு உலகளாவிய அணுகல் பற்றிய பிரதமரின் தொலைநோக்கு பார்வையை அடைய உதவும்.
source https://tamil.indianexpress.com/india/pm-narendra-modi-launches-ujjwala-2-o-for-providing-free-lpg-connections-331181/