செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

புதிய நிறுவனங்கள் வருகை: இந்திய விமான போக்குவரத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

  Pranav Mukul

India’s aviation market : கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக மோசமான அழுத்தத்தை சந்தித்த பிறகு, ஜெட் ஏர்வேஸ் 2.0, மற்றும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ஆதரவைப் பெற்ற ஆகாசா ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் இந்திய ஏர்லைன்ஸ் சேவைகளில் தங்களுக்கான இடத்தை தக்க வைக்க வருகின்றன. இரண்டு விமான நிறுவனங்களுக்கான விரிவான திட்டங்கள் இறுதி செய்யப்ப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில், இந்த நிறுவனங்கள் விமானப் பிரிவில் முதலீட்டாளர் பசியை அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதுவும் கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள அபாயநிலையை ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கின்ற ஏர்லைன்கள் சந்தித்து வருகின்ற இந்த சூழலில் இவை அடிக்கோடிட்டு காட்டுகின்றன.

ஆகாசா என்றால் என்ன?

ஆகாசா என்பது விரைவில் வர இருக்கும் அல்ட்ரா லோ-காஸ்ட் கேரியர் அல்லது யூஎல்சிசி வகை விமானங்கள் ஆகும். சந்தை முதலீட்டாளர் ராகேஷால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் 40% பங்குகள் அவரிடம் இருக்கும். ராகேஷ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த விமான சேவையை துவங்க இருப்பதாக கூறிப்பட்டுள்ளது. இந்த விமான நிறுவனத்தில் மேலும் முன்னாள் ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி வினய் தூபே மற்றும் இண்டிகோவின் முன்னாள் தலைவர் ஆதித்யா கோஷ் ஆகியோர் பணியாற்ற உள்ளனர். தூபே இந்த நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருக்கலாம். அதே நேரத்தில் கோஷ் ராகேஷின் நாமினியாக நியமிக்கப்பட உள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, மும்பையைச் சேர்ந்த முதலீட்டாளர் $ 35 மில்லியனை செலுத்துவார், மேலும் அடுத்த நான்கு ஆண்டுகளில் 70 விமானங்களை இந்த விமான சேவை நிறுவனத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளார். அடுத்த சில நாட்களில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து தடையில்லா சான்றிதழை பெறும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

இந்தியாவின் விமானப் போக்குவரத்து எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?

InterGlobe Aviation Ltd நிறுவனத்தின் பட்ஜெட் ஏர்லைனான இண்டிகோ உள்நாட்டு பயணிகள் சந்தையில் 54% க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக உள்ளது, அதனை தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், கோஏர், விஸ்தாரா மற்றும் ஏர் ஆசியா இந்தியா போன்ற நிறுவனங்கள் தங்களின் இடங்களை பிடித்துள்ளன. கோஏர் ஆரம்ப பொது வழங்கலுக்காக ஆவணங்களை தாக்கல் செய்து பிறகு தங்கள் நிறுவனத்தின் பெயரை கோஃபர்ஸ்ட் என்று மாற்றியுள்ளது. மேலும் தங்களின் வர்த்தக மாதிரியை மாற்றி அமைத்து அல்ட்ரா லோ-காஸ்ட் கேரியராக மாற உள்ளது. கொரோனா தொற்றின் ஆழமான தாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது விமான போக்குவரத்து துறை. ஆனால் இரண்டாம் அலையின் காரணமாக அதே நிலைமை புதிய நிதியாண்டிலும் நீடித்து வருகின்றது.

இது பெரிய, ஈடு செய்ய முடியாத இழப்பை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் மறு முதலீடு செய்வதற்கான மிகக் குறைந்த வழிகளை ஆய்வு செய்து வருகிறது. இந்திய அரசு கிட்டத்தட்ட எந்த நேரடி ஆதரவையும் வழங்கவில்லை; மறுசீரமைப்பு நோக்கங்களுக்காகக் கூட கடன் வழங்குபவர்கள் விமான நிறுவனங்களுக்கு கடன் தர மறுத்துவிட்டனர். விமான நிறுவனங்களுக்கு அழுத்தம் தர துவங்குவதைத் தவிர குத்தகைதாரர்களுக்கு விரைவில் வேறு வழியில்லை. அதே நேரத்தில் அதிக விலைச் சூழலுக்குச் செல்கிறோம். இது போன்ற நேரங்களில் விமானப்பிரிவு ஊழியர்களின் மன உறுதியும் குறைந்து வருகிறது என்று விமான ஆலோசனை நிறுவனமான CAPA தங்களின் 2021-22 ஆம் ஆண்டுக்கான இந்திய விமானக் கண்ணோட்டத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது.

புதிய நிறுவனங்களின் நிலை என்ன?

2019ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் மூடப்பட்ட நிலையில், ஏர் இந்தியாவின் சாத்தியமான டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் போன்ற நிகழ்வுகள் மற்ற நிறுவனங்களின் நிலைமைகளை மோசமாக்கிவிட்டது. , விமான நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களுடன் தங்களின் பங்குகளை ஒருங்கிணைக்கும் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி பரவலாக்கி வருகின்ற காரணத்தால் மீண்டும் இந்த துறை பழைய நிலைக்கு திரும்பும் என்று சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ”இந்திய விமான போக்குவரத்து பிரிவில் தேவைகள் தொடர்பாக நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். சில நிறுவனங்கள் இந்த சூழலில் இருந்து மீள்வது கடினம் என்று நினைக்கின்றேன்” என்று ப்ளூம்பெர்க் டிவியில் பேசிய ராகேஷ் கூறினார்.

Ultra low cost carrier என்றால் என்ன?

ULCC வணிக மாதிரியில், நிறுவனங்கள் இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற வழக்கமான பட்ஜெட் விமான நிறுவனங்களை விட செயல்பாட்டு செலவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. குறைந்த விலை மாடலில், விமான நிறுவனங்கள் பொதுவாக முழு-சேவை விமான அனுபவத்துடன் தொடர்புடைய சில வசதிகளை நீக்குகின்றன. உதாரணமாக இருக்கை தேர்வு, உணவு மற்றும் குடிபானம், செக்-இன் பேக்கேஜ், கேபின் பேக்கேஜ் போன்ற கூடுதல் சேவைகளையும் இவை நிறுத்தக் கூடும். பாரம்பரியமாக, லோ – காஸ்ட் கேரியர்கள் கணிசமாக குறைந்த கட்டணங்களுடன் செயல்படுகின்றன மற்றும் முழு சேவை கேரியர்களை விட சற்றே குறைந்த செலவில் மட்டுமே செயல்படுகின்றன, ULCC கள் லாபத்தை உறுதி செய்ய குறைந்த செலவில் செயல்படுகின்றன.

இந்தியாவில் ஆகாசா யாருக்கு சிறந்த போட்டியாளராக இருக்கும்?

யூ.எல்.சி.சியாக இருப்பதால், தற்போது சந்தையில் முதலிடத்தில் இருக்கும் இண்டிகோவுக்கு சரியான சவாலாக இவை இருக்கும். கொரோனா காலத்தில் பெரும் அடியை வாங்கிய நிலையிலும், இண்டிகோ மிகவும் வலுவான இடத்தில் உள்ளது. ஜூலை 27 அன்று இண்டிகோவின் CFO ஜிதென் சோப்ரா, post-earnings conference call-ல் பேசிய போது, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் எங்களின் இருப்பு நிலையே எங்களுக்கு பலமாக இருந்தது. விலை குறைப்பு, பணப்புழக்கம் அதிகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த வலிமையை நாங்கள் தொடர்ந்து அதிகரிப்போம் என்று கூறினார்.

2021ம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் இந்தியா விமான நிறுவனங்கள் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தது போலவே தற்போதைய நிதி ஆண்டிலும் இழக்க கூடும் என்று சி.ஏ.பி.ஏ நிறுவனம் கூறியுள்ளது. ஆகாசாவின் அறிமுகத்தை அடுத்து, ஜெட் ஏர்வேஸ் மறு அறிமுகமும் மிக முக்கிய நிகழ்வாக அமையக் கூடும். ஆரம்பத்தில் சந்தைப் பங்கை தீவிரமாகப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இரு நிறுவனங்களும் இருக்க கூடும். ஆனாலும், அவை கோவிட் 19 ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் விமானப் போக்குவரத்துகள் சீரடையும் போது, கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டணக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்குவதைப் பொறுத்தது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/how-indias-aviation-market-is-changing-with-new-players-328245/