What’s new in Arjun Mark-1A : சென்னையில் அமைந்திருக்கும் ஹெவி வேஹிக்கில்ஸ் ஃபேக்டரியில் ரூ. 7523 கோடி மதிப்பிலான இந்திய ராணுவத்திற்கு தேவையான 118 ராணுவ டேங்குகள் அர்ஜூன் மார்க் 1ஏவிற்கான ஆர்டரை வழங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
அர்ஜூன் மார்க் 1 ஏ என்றால் என்ன?
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அர்ஜூனின் உருவாக்கத்திற்கான பணியை 1980களின் பிற்பாதியில் துவங்கியது. அதுவரை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த ரஷ்ய ஆயுதங்களுக்கு மாற்றாக அதிகரிக்க இது துவங்கப்பட்டது. ஆரம்பகால அர்ஜுன் வேரியண்ட்டின் சோதனைகள் 1990களின் முற்பகுதியில் தொடங்கியது மற்றும் டேங்க் 2004ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டது. மார்க் -1 ஏ அல்லது எம்.கே -1 ஏ வேரியண்ட்டிற்கான பணிகள் ஜூன் மாதம் 2010ம் ஆண்டு துவங்கியது. அதன் சோதனை ஓட்டங்கள் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அடுத்த மூன்று ஆண்டுகளில் , DRDO மற்றும் இராணுவம் ஆகிய இரண்டாலும் விரிவான சோதனை மதிப்பீடுகள் நடத்தப்பட்டன, அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் கள சோதனைகள் உட்பட அதிக சோதனைகள் நடத்தப்பட்டன.
மார்க் 1ஏ வேரியண்ட்டில் 14 பெரிய மற்றும் 58 சிறிய என 72 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு செயல்பாட்டு முறைகளில் சிறந்த நிலப்பரப்பு இயக்கம் மற்றும் சூழ்ச்சித்திறன், சிறந்த இலக்கு கையகப்படுத்தல் மற்றும் 360 ° பார்வையில் இரவும் பகலும் துல்லியமான துப்பாக்கிச் சூடு நடத்துதல் போன்ற திறமைகள் இதனால் அதிகரித்துள்ளது. ‘காஞ்சன்’ என்ற பல அடுக்கு வலுவான பாதுகாப்பு கவசம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 120 எம்.எம். ரைஃபிள் துப்பாக்கி இணைக்கப்பட்டுள்ளதால் இது ஹண்டர் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. டிஆர்டிஓ தற்போது அர்ஜுனில் ஏவுகணைகளை செலுத்தும் சோதனைகளை நடத்தி வருகிறது.
Mk-1A டேங்க் Mk-1 டேங்கைக்காட்டிலும் அதிக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டுள்ளது. இது வெளிநாட்டு உற்பத்தியாளர்களை சார்ந்திருக்கும் நிலையை குறைத்துள்ளது. புதிய மாறுபாடு நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழுவினருக்கு சில வசதியான அம்சங்களை பெற்றுள்ளதாக கூறியுள்ளது. சில அம்சங்கள் போர்க்களத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி நெட்வொர்க்கை மையமாகக் கொண்ட போருக்கு சிறந்த ஆயுதமாக இதனை மாற்றுகிறது.
இதன் முக்கியத்துவம் என்ன?
மூன்று ரெஜிமெண்ட்டுகளில் இந்த 118 டேங்குகள் இடம் பெறும். VT-4 மற்றும் Al-Khalid ஆகிய இரண்டு டேங்குகளை பெற்ற பிறகு இந்த டேங்குகளின் பயன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இரண்டு டேங்குகளும் சீனாவில் உருவாக்கப்பட்டது. அவை இந்தியாவில் பயன்படுத்தப்படும், ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட டி90 டேங்குகளோடு ஒப்பிடத் தகுந்தவை. அர்ஜூன் மார்க் 1 பாலைவனங்களில் பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டது. புதிய அம்சங்களோடு, இந்த டேங்கு இதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த டேங்கைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தவை. டி90 மற்றும் அர்ஜூன் டேங்குகளை வைத்து களத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட டி90-க்கு இணையான அம்சங்களையும், சில நேரங்களில் அதனைக் காட்டிலும் கூடுதல் திறமைகளை கொண்டதாகவும் இந்த அர்ஜூம் மார்க்1ஏ இருந்ததாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
உயரமான பிரதேசங்களில் இதன் பயன்பாடு என்பது, இதன் எடை காரணமாக கேள்விக்குறியாக உள்ளது. . 72 புதிய சேர்த்தல்கள் கணிசமாக செயல்திறனை அதிகரித்திருந்தாலும், அவை ஏற்கனவே கனமாக இருந்த டேங்கில் 5 முதல் 6 டன்கள் வரை கூடுதல் எடையை சேர்த்துள்ளது.
இந்த திறன்களின் அடிப்படையில், இந்த உள்நாட்டு எம்பிடி உலகெங்கிலும் உள்ள அதன் வகுப்பில் உள்ள மற்ற டேங்குகளுக்கு நிகராக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்திய நிலைமைகளுக்காக கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே எல்லைகளை திறம்பட பாதுகாக்க இது பயன்படுத்த ஏற்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி திறனில் இது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது?
புதிய மாறுபாடு உள்நாட்டு கூறுகளின் விகிதத்தை அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த உத்தரவு பாதுகாப்புத் துறையில் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும் என்றும், ஆத்மநிர்பர் பாரத்தை நோக்கி இது ஒரு பெரிய படியாகும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த உற்பத்தி ஆணை, சுமார் 8,000 பேருக்கு வேலைவாய்ப்புடன் MSME கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட இந்திய விற்பனையாளர்களுக்கு ராணுவ ஆயுத உற்பத்தியில் புதிய வழியை திறக்கிறது. இது அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் உள்நாட்டு திறனை வெளிப்படுத்தும் ஒரு முதன்மை திட்டமாக உள்ளது.
மூத்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தங்களின் கருத்தை தெரிவித்த போது , அர்ஜூன் மார்க் 1ஏ 2018 மற்றும் 19 காலத்தில் இந்திய ராணுவத்தில் இணைக்க தயாராக இருந்தது. சென்னையை அடிப்படையாக கொண்ட டி.ஆர்.டி.டோ. ஃபெசிலிட்டி காம்பேட் வெஹிகில்ஸ் ரிசர்ச் மற்றும் டெவலப்மெண்ட் எஸ்டாபிலிஸ்மெண்ட் (DRDO facility Combat Vehicles Research and Development Establishment (CVRDE)) இந்த டேங்கின் உற்பத்திக்கு தலைமை வகித்தது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நடந்த விழாவில் முன்மாதிரி அர்ஜுன் Mk-1A யை ராணுவத் தளபதி ஜெனரல் M M நரவனேவிடம் ஒப்படைத்தார். இந்த டேங்குகளின் முதல் தொகுப்பை இந்திய ராணுவத்திற்கு வழங்க இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் ஆகும்.
source https://tamil.indianexpress.com/explained/what-new-in-arjun-mark-1a-and-why-its-acquisition-is-significant-346414/