புதன், 29 செப்டம்பர், 2021

புதிய புயலை உருவாக்கிச் சென்றதா குலாப் புயல்?

 Gulab cyclone

28 09 2021 Cyclone Gulab : செப்டம்பரில், பருவமழை நீடித்து வந்த அதே சூழலில் குலாப் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக கடலோர ஆந்திராவில் பலத்த மழை பெய்து வந்தது. புயலின் தாக்கம் இன்னும் நீடிக்கின்ற நிலையில் தெலுங்கானா, மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் செப்டம்பர் 30 வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் புயல் காலம் மிகவும் முன்பே துவங்கிவிட்டதா?

இந்தியாவில் ஆண்டுக்கு இருமுறை புயல் காலம் ஏற்படுகிறது. மார்ச் முதல் மே வரையிலும் பிறகு அக்டோபர் முதல் டிசம்பர் காலங்களில் புயல்கள் ஏற்படுகின்றன. சில அரிதான காலங்களில் புயல்கள் ஜூன் முதல் செப்டம்பர் காலங்களில் ஏற்படுகின்றன.

ஜூன் முதல் செப்டம்பர் காலங்களில் புயல்கள் என்பது மிகவும் அரிதாக ஏற்படும் காலமாகும். ஏனெனில் வலுவான பருவமழை நீரோட்டங்கள் காரணமாக சைக்ளோஜெனீசிஸுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அல்லது கிட்டத்தட்ட சாதகமான சூழ்நிலைகள் உருவாவதில்லை. இந்த கால கட்டம் தான் விண்ட் ஷியர் என்று அழைக்கப்படுகிறது. கீழ் மற்றும் மேல் வளிமண்டல மட்டங்களில் காற்றின் வேகத்தில் ஏற்படும் வித்தியாசம் விண்ட் ஷியர் என்று கூறப்படுகிறது. இந்த காலங்களில் இது மிகவும் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக மேகங்கள் செங்குத்தாக வளராது மற்றும் பருவமழை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாற்றம் அடையாது.

ஆனாலும் இந்த ஆண்டு குலாப் புயல் 25ம் தேதி அன்று வங்கக் கடலில் உருவாகி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டணம் பகுதியில் புயல் கரையை கடந்தது. எனவே இந்த ஆண்டு, சூறாவளி சீசன் வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கியது என்று கூறலாம். செப்டம்பர் மாதம் 2018ம் ஆண்டின் புயல் தினத்தில் தான் 2018ம் ஆண்டின் புயல் தினத்தில் தான் கடைசியாக வங்காள விரிகுடாவில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட புயலாகும்.

1950 முதல் 2021 வரையில் செப்டம்பர் மாதங்களில் வங்கக் கடலில் உருவான புயல்களின் எண்ணிக்கை

ஆண்டுபுயல்களின் எண்ணிக்கைஆண்டுபுயல்களின் எண்ணிக்கை
2018119682
2005119661
1997119611
1985119591
1981119552
1976119541
1974119501
19721
19711மொத்தம்18

குலாப் உருவாக சாதகமாக அமைந்த காலநிலைகள் என்ன?

மேடன் ஜூலியன் ஊசலாட்டத்தின் (MJO) ஒத்திசைவு கட்டம், வங்காள விரிகுடாவில் சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் குறைந்த அட்சரேகைகளில் செப்டம்பர் 24 அன்று குறைந்த அழுத்தநிலை உருவாக்கம் ஆகிய மூன்று காரணங்களில் சைக்ளோஜெனெசிஸிற்கு உதவி செய்தது என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் இயக்குநர் ம்ருத்துன்ஜெய் மொஹபத்ரா கூறினார்.

குறைந்த அழுத்தம் , நன்றாக குறிக்கப்பட்ட குறைந்த அழுத்தம், தாழ்வுநிலை, தீவிரமான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பிறகு குலாப் புயல் உருவெடுத்தது. இந்த அமைப்பு தெற்கு ஒடிசாவை நோக்கி சென்றாலும் இறுதியாக அது வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் கரையை கடந்தது.

ஒவ்வொரு மழைக்கால முடிவிலும் புயல்.. இந்த ஆண்டின் மழை நிலவரம்!

குலாப் புயலின் தாக்கம் நிலப்பகுதியில் எவ்வாறு உள்ளது?

கரையை கடந்ததும் புயல்கள் வலுவிழந்துவிடும். வடமேற்கு பகுதிகளில் இருக்கும் வறண்ட பகுதிகளில் இருந்து செப்டம்பர் மாதங்களில் பருவமழை விரைவாக வெளியேறும். ஆனால் இந்த ஆண்டு அந்த பகுதிகளில் ஈரப்பதம் இன்னும் இருக்கிறது. இது குலாப் புயல் கரையை கடந்த போதும் வலுவாக முன்னேற உறுதுணையாக செயல்படுகிறது.

செப்டம்பர் மாதங்களில் ஏற்படும் புயல்களுக்கே உள்ள அம்சம் இதுவாகும். தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக செயல்படும் போது ஈரப்பதம் இருக்கும். கூடுதலாக விண்ட் ஷூர் பலவீனமாக இருக்கும். எனவே தற்போது கரையை கடந்துள்ள குலாப் புயலை வலுவிலக்க வைக்க போதுமான காரணிகள் இல்லை என்றூ தேசிய காலநிலை முன்னறிவிப்பு மையத்தின் மூத்த வானிலை முன்னறிவிப்பாளர் ஆர்.கே. ஜேனாமணி கூறினார்.

திங்கள்கிழமை காலையில், புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மற்றும் மாலையில் மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. திங்கள் கிழமை மாலை 07:30 மணிக்கு கிடைத்த அறிவிப்பின் படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெலுங்கானா, தெற்கு சத்தீஸ்கர் மற்றும் விதர்பா பகுதியில் நிலவி வருகிறது. வடக்கு மகாராஷ்டிரா-குஜராத் கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த அமைப்புக்கு பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல்கள் மீண்டும் உருவாவது எவ்வளவு பொதுவானது?

காலநிலை ரீதியாக, புயல்கள் மீண்டும் தோன்றுவதற்கான அதிர்வெண் குறைவாக இருக்கலாம் ஆனால் இவை அரிதான நிகழ்வுகள் அல்ல என்று மொஹாபத்ரா கூறினார். சமீபத்திய காலங்களில் கஜா புயல் வங்காள விரிகுடாவில் உருவானது. தமிழகத்தில் 2018ம் ஆண்டு அது கரையை கடந்த பிறகு, மேற்காக நகர்ந்து மத்திய கேரளா கடற்கரையில் இருந்து கடலை தாண்டிய புயல் அரபிக் கடலில் புதிய புயலாக உருவானது.

வடக்கு அரபிக் கடலில் தற்போது நிலவும் வெப்பமான சூழல் காரணமாக குலாக் புயல் வரும் நாட்களில் மீண்டும் வலுப்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தை (68 முதல் 87 கிமீ/மணி) புயல் அடைந்தவுடன், ஐஎம்டி அதற்கு ஒரு புதிய பெயரை வழங்கும். வளிமண்டல மற்றும் பெருங்கடல் நிலைமைகள் சைக்ளோஜெனீசிஸுக்கு சாதகமாக இருப்பதால், இந்த அமைப்பு குஜராத் கடற்கரைக்கு அருகில் உள்ள வடக்கு அரபிக் கடலில் மீண்டும் தோன்றுவதற்கான வலுவான வாய்ப்பாக உள்ளது என்று இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் ராக்ஸி மேத்யூ கோல் கூறினார்.

தீவிரம் மற்றும் மேலும் மேற்கு நோக்கி நகர்வதற்கான இந்த நிகழ்தகவை உறுதிப்படுத்தும் வகையில், மற்றொரு சூறாவளி உருவாகும் வாய்ப்புகள் மிதமாக உள்ளது அதாவது 51 முதல் 75% வரை உள்ளது என்று ஜெனாமணி கூறினார். “மீண்டும் எழும் அமைப்பு இந்தியாவை பாதிக்காது, ஆனால் ஏற்கனவே கடலுக்குள் இருக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை முக்கியம் என்பதால் இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருக்கும் நாடுகளுக்கு ஐ.எம்.டி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/why-cyclone-gulab-could-give-rise-to-another-cyclone-347732/