Tamil Nadu Local Body Election :தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்காக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். அந்தந்த மாவட்டங்கில் வேட்புமனு தாக்கல் தீவிரமான நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருநெல்வேலி,தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ய அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டிய தமிழக தேர்தல் ஆணையம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும், செப்டம்பர் 15-ந் தேதி முதல் செப்டம்பர் 22-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து முதல் 5 நாட்கள் குறைவான மனுக்களே தாக்கல் செய்யப்பட்ட நிலையில். 6-வது நாளான இன்று ஒரே நாளில் 34091 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 9 மாவட்டங்களை சேர்த்து இதுவரை 55045 வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமகு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், நாளை மனுதாக்கல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-local-body-election-candidate-nomination-filed-344139/