செவ்வாய், 21 செப்டம்பர், 2021

டெல்லி ரகசியம்: ராகுல் காந்தியின் திடீர் விசிட்டுக்கு காரணம் என்ன?

 

பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவியேற்பு விழா நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. 
இதில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை இரவு வரை, ராகுல் காந்திக்கு எவ்வித திட்டமும் கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், திங்கள் காலை திடீரென பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடிவு செய்து சண்டிகர் சென்றார். அங்குப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, தனது தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தியைக் காணச் சிம்லா சென்றார். சோனியாவும், பிரியங்காவும் ஓரிரு நாளில் சிம்லாவிலிருந்து திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமர் புக் வேணுமா

மேற்கு வங்க மாநில பா.ஜ., எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ. சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர், திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்ததுமே, தனது ட்விட்டர் பக்கத்தின் புரோபைல் பிக்சரில் மம்தா தன்னை வரவேற்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, திங்களன்று பாஜக தேசியத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவரது முன்னாள் கட்சி சகா திலீப் கோஷை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். கோஷின் ட்விட்டர் சுயவிவரத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டு சுட்டிக்காட்டிய அவர், புதிய பதவியின் விவரத்தை பெங்காலியில் தவறாக எழுதியுள்ளீர்கள். வேண்டுமானால் தன்னிடமிருந்து பெங்காலி கிராமர் புக் பர்னாபரிச்சாய்’கடன் வாங்கிக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அப்கிரேட் மோடில் அரசு ஊழியர்கள்


அரசாங்கம் தனது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தவும், அவர்களை எதிர்காலத்தில் தயார்ப்படுத்தவும், தனியார்த் துறையின் நிபுணத்துவத்தை நாடுகிறது. அரசு ஊழியர்களுக்கான ரோல்ஸ், செயல்பாடுகள் மற்றும் திறன்கள் ஆகியவற்றின் கட்டமைப்பைத் தயாரிக்க ஆலோசகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஊழியர்கள் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு, ஒரு கட்டத்திலிருந்து  அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் வகையில் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக, ஐஏஎஸ் ஆபிசர்கள் வளர்ச்சிப் பாதையில் அடுத்தகட்டத்திற்கு முன்னேறும் போது, திறன்களும் அதிகரிக்கக்கூடும். இந்த புதிய முயற்சி மூலம், எதிர்காலத்தில் அரசு ஊழியர்களின் செயல்பாடுகளும், திறன்களும் எதிர்காலத்தில் வரும் இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-no-plans-to-attend-punjab-cm-oath-ceremony/