பிரபல இந்து ஈழவத் (Ezhava) தலைவரும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் பொதுச் செயலாளருமான வெள்ளப்பள்ளி நடேசன் திங்களன்று கூறியதாவது, நாட்டில் மதமாற்றம் மற்றும் “லவ் ஜிஹாத்” ஆகியவற்றில் “முன்னணியில்” இருப்பது முஸ்லீம் சமூகமல்ல, கிறிஸ்தவர்கள் என்று கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரத தர்ம ஜன சேனாவின் புரவலராக இருக்கும் நடேசன், கத்தோலிக்க மதகுரு ஒருவர் கிறிஸ்தவ பெண்கள் இந்து ஈழவா ஆண்களால் ஈர்க்கப்படுகிறார்கள் என்று எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பால பிஷப் ஜோசப் கல்லரங்கட்டின் சர்ச்சைக்குரிய “லவ் ஜிஹாத்” மற்றும் “போதைப்பொருள் ஜிஹாத்” குறிப்புகளை பற்றி கூறினார், மேலும், இந்த பிரச்சினையில் “முஸ்லீம் சமூகத்தை குறிவைப்பது சரியல்ல” என்றும் கூறினார்.
அப்போது, ஒரு கிறிஸ்தவப் பெண் முஸ்லீமை திருமணம் செய்துக் கொள்ளும்போது, பிற சமூகத்தைச் சேர்ந்த நூறு பெண்கள் கிறிஸ்தவர்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏன் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை? கிறிஸ்தவர்கள் ஈழவப் பெண்களை மணக்கிறார்கள். மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய குழு கிறிஸ்துவர்கள். முஸ்லிம்கள் அந்த அளவில் மதம் மாற்றம் செய்வதில்லை. லவ் ஜிகாத்தில், ஒரு கிறிஸ்தவப் பெண் மட்டுமே முஸ்லிம் சமூகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அதேசமயம், முழு குடும்பமும் கிறிஸ்தவத்திற்கு செல்கிறது. மதமாற்றம் மற்றும் லவ் ஜிஹாத் பற்றி பேசும்போது, சந்தேகத்திற்கு இடமின்றி கிறிஸ்தவர்கள் முன்னணியில் உள்ளனர்,” என்று நடசேன் கூறினார்.
கத்தோலிக்க நாளிதழ் தீபிகாவுடன் தொடர்புடைய மூத்த கத்தோலிக்க பாதிரியார் ராய் கண்ணாஞ்சிரா, சங்கனஞ்சேரி பேராயர் மத போதனை ஆசிரியர்களுக்கு ஒரு வீடியோ செய்தியில், சனிக்கிழமை அன்று இந்து ஈழவா இளைஞர்கள் கத்தோலிக்க பெண்களை காதல் திருமணத்தில் சிக்க வைக்க வியூகப் பயிற்சி பெற்றதாக குற்றம் சாட்டினார். கண்ணாஞ்சிரா பின்னர் எந்த சமூகத்தையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று கூறி மன்னிப்பு கோரினார்.
கடந்த வாரம், கத்தோலிக்க பிஷப் ஜோசப் கல்லரங்கட் முஸ்லீம் அல்லாதவர்களை குறிவைப்பதற்காக “லவ் ஜிஹாத்” மற்றும் “போதைப்பொருள் ஜிஹாத்” இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் கோரிக்கைகள் கேரளாவில் பெரும் விவாதத்தைத் தூண்டின.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கலாச்சாரத் தலைவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார், கேரளாவில் இன நல்லிணக்கத்தை பேணுவதற்கு அவர்களின் தலையீட்டை கோரினார்.
source https://tamil.indianexpress.com/india/thiruvananthapuram-christians-at-forefront-of-conversions-love-jihad-nda-ally-leader-344008/