ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

சிசிஐ அறிக்கை கசிவால் அதிருப்தியில் கூகுள்… நீதிமன்றத்தை நாட காரணம் என்ன?

 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட  அறிக்கையின் கசிவு குறித்து, பிரபல நிறுவனமான கூகுள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா Competition Commission of India (CCI)எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது.

சிசிஐ நடத்திய புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையில், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மாற்றுப் பதிப்புகளை வெளியிடவிடாமல் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களைக் கூகுள் கட்டுப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றத்தை நாட என்ன காரணம்?
இந்த அறிக்கை கசிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கூகுள் உயர் நீதிமன்றத்தை நாடியது. ஏனென்றால், இந்த அறிக்கை கசிவு நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிஐ இயக்குநர் ஜெனரலின் விசாரணை அறிக்கை, இறுதி முடிவாக கருதப்படாது. விசாரணையின் இறுதி உத்தரவு, சிசிஐ உறுப்பினர்கள் அனைவரும் விசாரணை அறிக்கையை மதிப்பாய்வு செய்த முடிவு செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

கூகுள் நிறுவனம் கூறுகையில், “இந்த நம்பிக்கை மீறல் தனது நிறுவனம் மற்றும் பாட்னர்களின் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கும். விசாரணையின் போது நிறுவனத்தின் சார்பில் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து, விசாரணை செயல்முறையை ரகசியமாகப் பாதுகாத்தோம். சிசிஐயிடம் இருந்தும் அதே அளவிலான ரகசியத்தன்மையை” எதிர்பார்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தனர்.


கூகுள் மீதான குற்றச்சாட்டு என்ன?
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்மார்ட்போன் சந்தையில் கூகிளின் ஆதிகத்தை குறித்து விசாரணை நடத்த சிசிஐ க்கு உத்தரவிடப்பட்டது. 

குற்றஞ்சாட்டினபடி, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் கூகுள் பிளே ஸ்டாேரை நிறுவக் கூகுள் கட்டாயப்படுத்துவதாகவும், இதன் காரணமாக அவர்களால் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை விற்பனை செய்ய முடியாத நிலை மொபைல் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்பட்டது.


கூகுள் பிளே ஸ்டாரை பதிவேற்றம் செய்வது மட்டுமின்றி கூகுள் செயலிகளின் முழு தொகுப்பையும் முன்கூட்டியே ஸ்மார்ட்போனில் நிறுவுவது போட்டி சட்டத்தின் மீறலாக கருதப்படுகிறது. இதே போன்று, ஸ்மார்ட் தொலைக்காட்சி சந்தையிலும் கூகிளின் செயல்பாடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/explained/why-google-unhappy-with-leak-of-a-cci-report/