திடீர் மாற்றம்
மூத்த தலைவர் பிரஜித் சின்ஹாவை அதன் திரிபுரா பிரிவின் தலைவராக காங்கிரஸ் வெள்ளிக்கிழமை நியமித்தது. ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்த சின்ஹா 2000-05 மற்றும் 2015-19 ஆகிய ஆண்டுகளில் மாநில பிரிவின் தலைவராக இருந்தார். அவர் நியமிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பூஜன் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். புஜான் பிஜுஷ் காந்தி பிஸ்வாஸின் மகன், அவருக்குப் பதிலாக சின்ஹா நியமிக்கப்படுகிறார்
சின்ஹாவின் ட்விட்டர் பக்கத்தின் கவர் பிக்கில் 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸின் செயல் தலைவராக இருந்த அரசர் வம்சாவளியான பிரத்யோத் டெப்பர்மன் இடம்பெற்றுள்ளார்.
காங்கிரஸிலிருந்து விலகிய டெப்பர்மன், பழங்குடியினரின் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் பெரும்பான்மையை பெற்ற டிப்ரா மோதாவை வழிநடத்தி வருகிறார்.
கோயில் இடிக்கப்பட்டது உண்மையா
டெல்லி போலீஸ் கடந்த வியாழக்கிழமை முஸ்லீம் அதிகம் உள்ள நூர் நகர் பகுதியில் இந்து கோயில் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கோயிலை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என பாஞ்சஜன்யா ஆசிரியர் ஹித்தேஷ் சங்கரின் ட்விட்டரில் பகிர்ந்தார்.
இந்த பதிவை பார்த்த போலீஸ், உடனடியாக கோயில் இடிக்கப்பட்டதாகக் கூறிய இடத்திற்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து, இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அவரது நிலத்தில் உள்ள கடிடத்தை தான் இடித்துள்ளார். கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சங்கருக்கு பதில் ட்வீட் செய்தனர்.
மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா இந்தியில் பேசும் போது, மொழிபெயர்ப்பு சேவை சரியாக இல்லை என தென் மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் பல முறை புகார் கூறுவதை பார்த்திருக்கக்கூடும். ஆனால், அவர் கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றும் போது எதிர்பாராத கோரிக்கையை எதிர்கொண்டார்.
இந்தியில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், அவரை கன்னடத்தில் பேசுமாறு வலியுறுத்தினார். எம்எல்ஏ கே அன்னதானியின் கோரிக்கையால், ஆளும் பாஜக தலைவர்களைச் சிறிது நேரம் திகைத்து போனார்கள். இருப்பினும், சபாநாயகர் தனது உரையை இந்தியில் தான் தொடர்ந்தார்.
source https://tamil.indianexpress.com/india/jds-mla-demanded-that-birla-speak-in-kannada-during-legislature/