28 09 2021 : மூன்று நாட்களாக தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 200 ஆக பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று 1697 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் திங்கள் கிழமை அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1657 ஆக உறுதியானது. தஞ்சை, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவையில் திங்கள் கிழமை அன்று அதிகபட்சமாக 189 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவைக்கு அடுத்தபடியாக சென்னையில் அதிகபட்சமாக 186 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளாது. ஈரோடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முறையில் 117 மற்றூம் 113 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 15 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. தென்காசி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதிய கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 5-ஆக பதிவாகியுள்ளது.
நேற்று மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக பதிவாகியுள்ளது. அதில் 5 நபர்கள் கோவையை சேர்ந்தவர்கள். மூன்று பேர் சென்னையிலும், தஞ்சை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர். 7 மாவட்டங்களில் ஒருவர் பலியாகியுள்ளனர். மீதம் உள்ள 27 மாவட்டங்களில் ஒரு மரணம் கூட பதிவாகவில்லை. மொத்தமாக கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 35,509 ஆக பதிவாகியுள்ளது. முழுமையாக குணம் அடைந்து வீடு சென்றவர்களின் எண்ணிக்கை 1662. தற்போது 17261 நபர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக தமிழகத்தில் 24.9 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது தமிழக அரசிடம் மொத்தமாக 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார். தமிழகத்தில் உள்ள வயது வந்தவர்களில் 70% பேர் முதல் டோஸையும், 20% பேர் முழுமையாக கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் யாரையும் கட்டாயத்தின் பெயரில் தடுப்பூசி செலுத்தக் கூறவில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தொற்றில் இருந்தும், இறப்பில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்று மக்களுக்கு விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்துகிறோம் என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மத்திய அரசு போதுமான தடுப்பூசிகள் வழங்கும் பட்சத்தில் இந்த வார இறுதியிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-daily-report-1657-fresh-cases-reported-in-tamil-nadu-347689/