திங்கள், 20 செப்டம்பர், 2021

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… ஷாக்கிங் ரிப்போர்ட்

 19 09 2021 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், தினசரி பாதிப்பு பதிவாகிக் கொண்டே இருக்கிறது. நேற்று ஒரே நாளில், 1,653 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் குறிப்பாக, சென்னையில் மட்டும் 204 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,43,683. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,47,478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 10 ஆம் தேதி, கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,798 ஆக இருந்த நிலையில், நேற்று 1,895 ஆக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் 97 பேர் கூடுதலாக கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளதா என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் 100க்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது 6 மண்டலங்களில் தான் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் 100க்கும் குறைவாக உள்ளது. அவை திருவோட்டியூர் (50), மணாலி (15), மாதவரம் (61), ராயபுரம் (82), ஆலந்தூர் (97), ஷோல்லிங்கநல்லூர் (93) ஆகும். இதில்,கடந்த வாரம் 100க்கும் குறைவாக இருந்த தண்டையார்பேட், திருவிகாநகர் பகுதியில் தற்போது பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக அண்ணா நகரில் 203 பேரும், கோடம்பாக்கத்தில் 201 பேரும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் தான் கொரோனா சிகிச்சை எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ” கொரோனா சிகிச்சை பெறுவோரின் தெருக்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. கடந்த வாரம், 872 தெருக்களில் ஒரு கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில், தற்போது அவை 834ஆக குறைந்துள்ளது.
5க்கும் மேலான கொரோனா பாதிப்புகள் பதிவாகும் தெருக்களின் எண்ணிக்கை 25இல்20 ஆக குறைந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ச்சியாக மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 5,700 திருமண நிகழ்வுகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில், 445 நிகழ்வுகளில் கரோனா விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டு 8.5 லட்சம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது, மாஸ்க் அணிவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றைச் சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/corona-case-increased-in-chennai/