கடந்த 2011 ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும்போது வழிப்பாதையில் பைப் குண்டு வைத்தது, பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களைக் கொல்ல சதி செய்தது உள்ளிட்ட வழக்குகளில் பிலால் மாலிக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உயர் பாதுகாப்பு கொண்ட பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாம்புடன் விளையாட்டு
இந்நிலையில், நேற்று காலை பிலால் மாலிக் சக கைதிகளுடன் சிறை வளாகத்திலிருந்துள்ளார். அப்போது, அங்கு ஓடிய சாரா பாம்பை பிலால் பிடிக்க முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த பாம்பு பிலால் மாலிக்கின் வலது கையில் கடித்தது.
பாம்பை கொன்ற சக கைதிகள்
இதனால், வலியால் அலறி துடித்தவாறு பாம்பை தூக்கியெறிந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த சக கைதிகள், அந்த பாம்பை விரட்டி பிடித்து அடித்துக் கொன்றனர்.
வலியில் துடித்த பிலால் மாலிக்கை, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
சாரா பாம்பு குறைந்த விஷத்தன்மை கொண்டது என்பதால், முதலில் சிறை மருத்துவமனையிலே சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிலால் மாலிக்கின் உயிருக்கு ஆபத்தில்லை எனவும், அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு விரைவில் சிறைக்குத் திரும்புவார் என மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. 18 09 2021
source https://tamil.indianexpress.com/tamilnadu/puzhal-jail-inmate-bitten-by-snake/