திங்கள், 28 பிப்ரவரி, 2022

சாதிய கொடுமையால் இஸ்லாத்துக்கு மாறிய பட்டியலின மக்கள்

25 2 2022  தேனி அருகே சாதிய தாக்குதல்களில் இருந்து மீள்வதற்காக 8 குடும்பங்களைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினர் 40 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலித்களாக இருப்பதால் சுயமரியாதை கிடைப்பதில்லை எனக் கூறி கடந்தாண்டு கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தலித் சமுதாயத்தினர் இஸ்லாம் மதத்தை தழுவினர். மாநிலம் முழுவதும் பெரும் பேசு பொருளான...

10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு

 28 2 2022நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து 8,013 ஆக பதிவாகியுள்ளது.கொரோனா தொற்றின் மூன்றாம் அலையானது கடந்த 2021ம் ஆண்டில் இறுதியில் பரவத் தொடங்கி ஜனவரி வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இரண்டாம அலைக்கு பிறகு மக்கள் அனைவரும் மீண்டும் அதிக பாதிப்புக்குள்ளாகினர். தற்போது சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கையாக கணிசமாக குறைந்துவருகிறது. டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022ல் 1 லட்சத்தை...

ஆஸ்திரேலியாவில் வெள்ளம்: 7 பேர் உயிரிழப்பு.

 28 2  2022ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடலோர பகுதிகளில் புயல் காற்று வீசி வருவதன் எதிரொலியாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் 4.6 அடி உயரம் வரை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வாகன...

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை.

 28 2 2022 ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 12ஆம் தேதி இரணைத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில்...

ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா; தேஜஸ்வி வருகை

 Tejashwi attend Stalin’s Book release event in Chennai: 28 2 2022 சென்னையில் நடைபெறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில், பீகாரின் எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.தேஜஸ்வி யாதவ், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில்...

SWIFT என்றால் என்ன? ரஷ்யா நீக்கம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

 உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகள்ளுக்கான சமூகத்தில் (SWIFT) இருந்து ரஷ்ய நாட்டு வங்கிகளை விலக்குவதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களும் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நடவடிக்கையானது “சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவது” என்று கூட்டறிக்கை கூறுகிறது....

அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதம்… ரஷ்யா- உக்ரைன் லேட்டஸ்ட் 10 நிகழ்வுகள்

 27 2 2022 Ukraine Russia crisis latest news in Tamil: உக்ரைன் மீது ரஷ்யா 4ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பேச்சு வார்த்தை பெலாரஸ் எல்லையில், இரு நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் மத்தியில் நடைபெற உள்ளது.இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்ய விவகாரத்தில் நடந்த லேட்டஸ்ட் நிகழ்வுகளைப் பார்ப்போம்.SWIFT-ல்...

நேட்டோ உறுப்பினர் ஆகும் முயற்சி: பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை ரஷ்யா எதிர்ப்பது ஏன்?

 28 2 2022 உக்ரைன்-ரஷ்யா நெருக்கடியில், நோர்டிக் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கும் முன்னேற்றங்கள், படையெடுப்புடன் தொடர்புடையதாகவும் அதற்கு பதிலளிக்கும் விதமாகவும், பிராந்தியத்தில் மேலும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் உறுப்பினர்களாக இருந்திருந்தால், இந்த நடவடிக்கை தீவிரமான...