வியாழன், 17 பிப்ரவரி, 2022

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி: காய் நகர்த்தும் முதல்வர் ஸ்டாலின்!

 17 2 2022 பல்வேறு பிரச்சினைகளில் மத்திய-மாநில உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டிருப்பது மத்திய அளவில் மற்றும் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத முதல்வர்களின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது, புதிய அரசியல் கூட்டணி உருவாக க்கூடும்  என்று தெரிகிறது. இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் உரையாடியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நீதியை முன்னெடுத்துச் செல்ல திமுக ஒரு தளத்தை உருவாக்க விரும்புகிறது என்று ஸ்டாலினின் சமீபத்திய அறிக்கையைத் தொடர்ந்து, பாஜக  முதலமைச்சர்கள் அல்லாத பிற முதலமைச்சர்கள் பங்கேற்கும்  மாநாட்டை அவர் முன் மொழிந்துள்ளார்.

இதே போல, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் அவசியம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் பானர்ஜி ஆகியோருடன் விவாதிப்பதாகக் கூறினார்.

ராவ் சமீப காலமாக பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை அதிகரித்து, காங்கிரஸுடன் நட்பு ரீதியாக நெருக்கமாக மாறி வருகிறார். தெளிவாக, மாநில முதலமைச்சர்களின் இந்த நகர்வானது, 2024 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பொதுவான பாஜக-எதிர்ப்பு கூட்டணியை நோக்கிச் செல்லும் என்று தெரிகிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

புலனாய்வு அமைப்புகளின் பங்கு முதல் ஜிஎஸ்டி, ஐஏஎஸ் கேடர் விதிகள் மற்றும் மிக சமீபகாலமாக மாநிலங்கள் ரேஷன் கடைகள் உள்ளிட்ட (PDS) தரவைப் பகிர்வது போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மத்திய-மாநில உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டிருப்பது புதிய கூட்டணியை  உருவாக்குவதற்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களின் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உரிமைகளின் மீது, மத்திய அரசு உத்தரவின் பேரில் பேரில் அத்துமீறுவதாக இந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

குடியரசின் ஒற்றையாட்சிப் பார்வையாலும், மக்களவையில் பெரும்பான்மை பலத்தாலும் உந்தப்பட்ட பாஜக, தேர்தலில் தனது தடத்தை விரிவுபடுத்துவது மற்றும் ஆட்சியில் தனது கருத்தைக் கொண்டிருப்பது போன்ற தனது லட்சியங்களை வெளிப்படுத்தி வருகிறது.

கே.சி.ஆர் போன்ற தலைவர்கள், இந்திய அரசியலில் இப்போது பிஜேபி தனக்கு சாதகமான  நிலையை அடைந்திருப்பதை உணர்ந்திருக்கின்றனர்.  அது தங்கள் மாநிலங்களின் கோட்டைகளில் முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக தன்னை வெளிப்படுத்தும்  என்று எதிர்பார்க்கிறார்கள்.

சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஜார்க்கண்டில் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளும் இதே வழியில் சிந்தித்து, மாநில கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணிக்கு ஆதரவளிக்க வாய்ப்புகள் உள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

ஐந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும் போது, நிச்சயமாக மாநில கட்சிகளின் கூட்டணியின் தோற்றம் தெளிவாகத் தெரியவரும்.  இந்த  கூட்டணியில் காங்கிரஸுக்கு பங்கு இருக்கிறதா என்பது ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்தே இருக்கின்றன.

மாறாக, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு  வெற்றி கிடைத்தால், அது எதிர்க்கட்சித் தலைவர்களின் லட்சியத்தை சிதைப்பதாக இருக்கும்.  எவ்வாறாயினும், பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைவதற்கான எதிர்க்கட்சி கூட்டணி  முயற்சியை ஒன்றிணைப்பதற்கான ஒரு பசை தேவைப்படும்.


கடந்த காலங்களில் இதேபோன்று முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ஏனெனில் அப்படி முயற்சிகளை மேற்கொண்ட கட்சிகள் பிஜேபிக்கு தாங்கள்தான் சரியான மாற்று என்பதற்கான ஒரு அழுத்தமான பார்வையையோ அல்லது வலுவான கொள்கையையோ வழங்க முடியவில்லை. வெறுமனே பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு மட்டுமே ஒன்றிணைவை உருவாக்காது. .

இந்த தலையங்கம் முதலில் பிப்ரவரி 15, 2022 அன்று அச்சுப் பதிப்பில் ‘The federal push’என்ற தலைப்பில் வெளியானது..

தமிழில்; ரமணி

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cm-stalin-attempts-to-form-alliance-at-national-leval412573/