22 2 2022 தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம்(பிப்ரவரி 19) அன்று தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.
இதற்காக மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
21 மாநகராட்சிகளின் பட்டியலையும் அதன் தேர்தல் முடிவுகளையும் இங்கே பார்க்கலாம்.
- சென்னை மாநகராட்சி (200 வார்டுகள்)
- மதுரை மாநகராட்சி (100 வார்டுகள்)
- கோவை மாநகராட்சி (100 வார்டுகள்)
- திருச்சி மாநகராட்சி (65 வார்டுகள்)
- சேலம் மாநகராட்சி (60 வார்டுகள்)
- திருநெல்வேலி மாநகராட்சி (55 வார்டுகள்)
- திருப்பூர் மாநகராட்சி (60 வார்டுகள்)
- வேலூர் மாநகராட்சி (60 வார்டுகள்)
2 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ஈரோடு மாநகராட்சி (60 வார்டுகள்)
ஈரோடு மாநகராட்சியில் போட்டியின்றி ஒரு வேட்பாளர் வார்டு உறுப்பினராகத் தேர்வு செயய்ப்பட்டுள்ளார்.
- தூத்துக்குடி மாநகராட்சி (60 வார்டுகள்)
- தஞ்சாவூர் மாநகராட்சி (51 வார்டுகள்)
- திண்டுக்கல் மாநகராட்சி (48 வார்டுகள்)
- ஒசூர் மாநகராட்சி (45 வார்டுகள்)
- நாகர்கோவில் மாநகராட்சி (52 வார்டுகள்)
- ஆவடி மாநகராட்சி (48 வார்டுகள்)
- காஞ்சிபுரம் மாநகராட்சி (51 வார்டுகள்)
- கரூர் மாநகராட்சி (48 வார்டுகள்)
போட்டியின்றி ஒரு வேட்பாளர் வார்டு உறுப்பினராகத் தேர்வு செயய்ப்பட்டுள்ளார்.
- கடலூர் மாநகராட்சி (45 வார்டுகள்)
- சிவகாசி மாநகராட்சி (48 வார்டுகள்)
- தாம்பரம் மாநகராட்சி (70 வார்டுகள்)
- கும்பகோணம் மாநகராட்சி (48 வார்டுகள்)
- source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-urban-election-municipal-corporation-list-and-its-results414835/