திங்கள், 28 பிப்ரவரி, 2022

சாதிய கொடுமையால் இஸ்லாத்துக்கு மாறிய பட்டியலின மக்கள்

25 2 2022  தேனி அருகே சாதிய தாக்குதல்களில் இருந்து மீள்வதற்காக 8 குடும்பங்களைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினர் 40 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலித்களாக இருப்பதால் சுயமரியாதை கிடைப்பதில்லை எனக் கூறி கடந்தாண்டு கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தலித் சமுதாயத்தினர் இஸ்லாம் மதத்தை தழுவினர். மாநிலம் முழுவதும் பெரும் பேசு பொருளான இச்சம்பவத்தைப் போல தேனியிலும் தற்போது தலித் சமுதாயத்தினர் 40பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.‌

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது டொம்புச்சேரி கிராமம்.‌ பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் அப்பகுதியில் தலித் சமுதாயத்தினரும் ஏறக்குறைய நூற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் சாதிய வன்கொடுமைகளால் நிகழும் தாக்குதலில் இருந்து மீள்வதற்காக  டொம்புச்சேரி கிராமத்தில் வசிக்கும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த  8 குடும்பங்களில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 40பேர் அன்மையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.

source https://tamil.news18.com/news/tamil-nadu/theni-district-theni-dalits-converted-to-islam-due-to-caste-oppression-aru-703011.html

இஸ்லாமிய ம்தமாற்றம்

இஸ்லாமிய ம்தமாற்றம்