23 2 2022
சென்னையில் சிஏஏவுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய இந்திய முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் நகராட்சியில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னுடைய வெற்றி குறித்து, ஹிஜாப் சர்ச்சைக்கு நான் கொடுத்த சைலன்ட் பதில் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்று பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானது. திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. குறிப்பாக, சென்னையில் உள்ள 200 வார்டுகளில் திமுக திமுக சென்னையில் 153 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 15 இடங்களை கைப்பற்றியது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களிலும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 4 இடங்களிலும் மதிமுக 2 இடங்களிலும் சிபிஐ , இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாஜக அமமுக தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இவர்கள் மட்டுமல்லாமல் சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.
சென்னையில், திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு அளிக்கப்பட்ட ஒரு இடத்தில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட போட்டியிட்ட பாத்திமா முசாபர் வெற்றி பெற்றுள்ளார். இவர், சிஏஏ எதிர்ப்பு போராட்டம் போன்றவற்றில் ஏற்கெனவே நன்கு அறியப்பட்டவர். இவர் சென்னை எழும்பூர் 61வது வார்டில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஏணி சின்னத்தில் முதல் பெண் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பாத்திமா முசாபரின் தந்தை அப்துல் சமத் துறைமுகம் பகுதியில் கடந்த 1958ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்.
பாத்திமா முசாபர்சென்னையில், சிஏஏ எதிர்ப்பு போராட்டம், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நிறைய போராட்டங்களை நடத்தியவர்.
தனது வெற்றி குறித்து பாத்திமா முசாபர் கூறுகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இது வரலாற்று சாதனை. நாங்கள் ஒரே ஒரு வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். தற்போது நடந்து வரும் ஹிஜாப் விவகாரத்திற்கு நான் கொடுத்த சைலண்ட் பதில் இது! நான் பொதுமக்களுக்கு சேவை செய்வேன். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பாலமாக இருந்து உதவுவேன் என்று கூறினார்.
சென்னை சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஏதிரான போராட்டங்களை நடத்திய பாத்திமா முசாபர், சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். தனது வெற்றி ஹிஜாப் சர்ச்சைக்கு அளித்த சைலண்ட் பதில் என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/caa-anti-fighter-iuml-woman-candidate-silent-answer-to-hijab-row-who-win-in-chennai-corporation-local-body-polls-415994/