வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம்: கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெயின் விலை

 24 2 2022 ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் புதின் உத்தரவிட்ட நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது. இதனால், இந்தியாவில் பெட்ரோல் விலை 7 முதல் 8 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து, எதிர் வரும் நாட்களில் கச்சா எண்ணெயின் விலை 150 டாலர் வரையில், உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் ரஷ்யாவிலிருந்து மேற்குப் பாதை வழியாக எண்ணெய் இறக்குமதி செய்வதால், விநியோகத்தில் எந்தத் தடையும் இருக்காது என்றும் கருதப்படுகிறது.

அண்மைச் செய்தி: நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்றுகிறதா பாஜக? துணை மேயர் கேட்டு காங்., போர்கொடி

இதேபோல, உக்ரைன் போர் பதற்றத்தால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 108 ரூபாய் உயர்ந்து 4,827 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 865 ரூபாய் உயர்ந்து 38,616 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 90 காசுகள் உயர்ந்து 70 ரூபாய் 60 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


source https://news7tamil.live/russia-ukraine-war-tensions-rising-crude-oil-prices.html