புதன், 16 பிப்ரவரி, 2022

ஏர் இந்தியாவின் புதிய சிஇஓ இல்கர் அய்சி… வெளிநாட்டினரை நியமிக்க என்ன காரணம்?

 

டாடா சன்ஸ் துருக்கிய ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் இல்கர் அய்சியை ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது. கடந்த மாதம், மத்திய அரசிடமிருந்து ஏர் இந்தியாவை டாடா குழுமம் பெற்றது.

இல்கர் அய்சி யார்?

டாடா சன்ஸ் துருக்கிய ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் இல்கர் அய்சியை ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது. கடந்த மாதம், மத்திய அரசிடமிருந்து ஏர் இந்தியாவை டாடா குழுமம் பெற்றது.

இல்கர் அய்சி யார்?

2015 முதல் துருக்கிய ஏர்லைன்ஸின் தலைவராக இருந்த இல்கர் அய்சி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜனவரி 27 அன்று அறிவித்தார். அன்றைய தினம் தான், ஏர் இந்தியா முழுவதுமாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அய்சி 1971 இல் இஸ்தான்புல்லில் பிறந்தார். பில்கென்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் 1994 பேட்சின் முன்னாள் மாணவர் ஆவார்.

1997 இல் இஸ்தான்புல்லில் உள்ள மர்மரா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் முதுகலை படிப்பை முடித்தார்.

2011 இல், அவர் துருக்கியின் முதலீட்டு ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு ஏஜென்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், இஸ்தான்புல் மேயரான ரெசெப் தயிப் எர்டோகனின் ஆலோசகராக அய்சி இருந்துள்ளார். அவர் துருக்கியின் மிகப்பெரிய மேம்பாட்டுத் திட்டங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார். எர்டோகன் தற்போது துருக்கியின் அதிபராக உள்ளார்.

அய்சி ஏர் இந்தியா சிஇஓ-ஆக என்ன காரணம்?

டாடா குழுமம் விமான நிறுவனத்தை வழிநடத்த ஒரு வெளிநாட்டவரை பணியமர்த்த முடிவு செய்தது. அய்சியை தேர்வு செய்வதற்கு முன்பு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கேரியர்களுடன் உள்ளவர்கள் உட்பட பல சாத்தியமான நபர்களை டாடா குழுமம் நேர்காணல் செய்தது. ஏனென்றால், விமான நிறுவனத்தை உலகளாவிய பிராண்டாக மாற்றும் முனைப்பில் டாடா திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இல்கர் ஒரு விமானப் போக்குவரத்துத் துறையின் தலைவர், அவர் அங்கு பணியாற்றிய காலத்தில் துருக்கிய ஏர்லைன்ஸை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஏர் இந்தியாவை வழிநடத்தும் டாடா குழுமத்திற்கு அவரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் மற்ற விமான நிறுவனங்களில் வெளிநாட்டவர்கள் CEO-களாக இருக்கிறார்களா?

ஆம், இந்திய விமான நிறுவனங்களின் விளம்பரதாரர்கள் நீண்ட காலமாக தங்கள் விமானங்களை இயக்க உலக அனுபவமுள்ளவர்களை பார்த்து வருகின்றனர்.

டாடா குரூப்-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு முயற்சி விமான நிறுவனமான விஸ்டாராவின் சிஇஓ-க்களாக சிங்கப்பூரை சேர்ந்த பீ டீக் யோ , லெஸ்லி தங் ஆகியோர் இருந்தனர்.

கோ ஏர் விமான நிறுவனம், கார்னெலிஸ் வ்ரீஸ்விஜ்க், வொல்ப்காங் ப்ரோக் ஸ்காயர் உட்பட பல வெளிநாட்டினரைக் கொண்டுள்ளது.

இண்டிகோ அதன் உயர் நிர்வாகத்தில் பல வெளிநாட்டினரைக் கொண்டுள்ளது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா ஒரு அமெரிக்க குடிமகனாகும். தற்போது, Prock-Schauer தலைமை இயக்க அதிகாரியாகவும், வில்லி போல்டர் தலைமை வணிக அதிகாரியாகவும் உள்ளனர்.

soure https://tamil.indianexpress.com/explained/who-is-ilker-ayci-the-new-air-india-ceo-411667/