வியாழன், 24 பிப்ரவரி, 2022

சொன்ன தருமபுரி; கொங்கு மண்டலத்தில் வெற்றி கொடி நாட்டிய திமுக

 23 2 2022 

DMK sweeps the western region of Tamil Nadu

DMK sweeps the western region of Tamil Nadu: 10 வருடங்களுக்கு பிறகு நடைபெற்று முடிந்தது உள்ளாட்சித் தேர்தல். 21 மாநகராட்சிகளும் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும் நகராட்சி அமைப்புகள் மற்றும் பேரூராட்சி அமைப்புகளிலும் தங்களின் செல்வாக்கை நிலை நிறுத்தியது திமுக. 1996ம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் மோசமான வகையில் அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது.

அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது கொங்கு மண்டலம். அங்கே திமுகவின் எத்தகைய வாக்குறுதிகளிலும் பெரிய அளவில் வாக்குகளாக மாறாமல் இருந்தது அக்கட்சியினருக்கு ஏமாற்றத்தை தந்தது வந்தது. 2011 முதல் 2021 வரை நடைபெற்ற மூன்று சட்டமன்ற தேர்தலில், கோவையில் ஒரே ஒரு முறை, ஒரே ஒரு திமுக எம்.எல்.ஏ மட்டுமே மக்களால் தேர்வு செய்யப்பட்டு கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதிமுகவின் சாம்ராஜ்ஜியமாக இருந்தது கொங்கு மண்டலம்.

ஒவ்வொரு முன்னெடுப்பிலும் செங்கல் செங்கலாக அதிமுக கோட்டையின் அஸ்திவாரத்தை பெயர்த்தெடுத்தது ஆளும் கட்சி. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும், சேலம் மாவட்டம் ஹைவேஸ் காலனி வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 8 கொங்கு மாவட்டங்களில் மக்கள் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பதை நாம் இங்கே காண்போம்.

இப்படியும் ஒரு தோல்வி.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு வாக்குக் கூட பெறாத வேட்பாளர்கள்!

கொங்கு மாவட்டங்களும் உள்ளாட்சி அமைப்புகளும்

தமிழகத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் கோவை, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், நீலகிரி, மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை கொங்கு மண்டலம் என்று அழைக்கின்றோம். (அதிகாரப்பூர்வமாக இல்லை).

மாவட்டங்கள்பேரூராட்சி வார்டுகள் எண்ணிக்கைநகராட்சி வார்டுகள் எண்ணிக்கைமாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை
கோவை504198100
தருமபுரி15933
ஈரோடு63010260
கிருஷ்ணகிரி933345
நாமக்கல்294153
சேலம்47416560
நீலகிரி186108
திருப்பூர்23314760

கோவை

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 76 வார்டுகளை கைப்பற்றியது திமுக. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 9 வார்டுகளிலும், சி.பி.ஐ(எம்) மற்றும் சி.பி.ஐ. கட்சி 4 இடங்களிலும், மதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட கோவையில் அக்கட்சி வெறும் 3 வார்டுகளில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியது.

கோவையில் அமைந்திருக்கும் 7 நகராட்சிகளில் இடம் பெற்றுள்ள 198 வார்டுகளில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் 6 வார்டுகளிலும், சி.பி.ஐ.(எம்) கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. அதிமுக 22 வார்டுகளிலும் பாஜக ஒரே ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

513 வார்டுகளை உள்ளடக்கிய 33 பேரூராட்சி அமைப்புகளிலும் திமுகவின் கையே ஓங்கி இருந்தது. திமுக மொத்தமாக 386 வார்டுகளில் வெற்றி வாகை சூடியது. இந்திய தேசிய காங்கிரஸ் 12 வார்டுகளிலும், சி.பி.ஐ.(எம்) 9 வார்டுகளிலும், சி.பி.ஐ 1 வார்டிலும் வெற்றி பெற்றது. பாஜக 5 வார்டுகளிலும், அ.இ.அ.தி.மு.க. 71 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. அதே போன்று பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டையை பறிகொடுத்த அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள்: எந்தெந்த மாவட்டங்களில் வீழ்ச்சி?

தருமபுரி

தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் அதிமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக 18 இடங்களை கைப்பற்றியது.

அதே போன்று, அரூர், கடத்தூர், காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பி. மல்லாபுரம், கம்பைநல்லூர் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் இடம் பெற்றுள்ள 157 வார்டுகளில் திமுக 102 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், சி.பி.ஐ.எம். 1 வார்டிலும் வெற்றி பெற்றது. அதிமுக 21 இடங்களிலும், தேமுதிக 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.

ஈரோடு

மாநகராட்சி வார்டுகளில் 1-ல் மட்டும் போட்டியின்றி வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 20 நபர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

60 வார்டுகளைக் கொண்ட ஈரோடு மாநகராட்சி அமைப்பில் 6 இடங்களை அதிமுக கைப்பற்றியது. திமுக 44 இடங்களை கைப்பற்றியது. இந்திய தேசிய காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி பெற்றது.

102 நகராட்சி வார்டுகளில் திமுக 62 வார்டுகளை கைப்பற்றியது. இந்திய தேசிய காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றது. சி.பி.ஐ இரண்டு இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக 23 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது.

630 பேரூராட்சி வார்டுகளில் ஏற்கனவே 20 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 90 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. பாஜக 6 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது. 411 இடங்களில் வெற்றி பெற்று திமுக அதிரடி காட்ட, 22 வார்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றது. சி.பி.ஐ. 2 இடங்களிலும், சி.பி.ஐ.எம். 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக 6 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது.

3-வது பெரிய கட்சியாக நிரூபித்த காங்கிரஸ்: பா.ஜ.க-வை விட எத்தனை இடங்கள் அதிகம்?

கிருஷ்ணகிரி

45 வார்டு உறுப்பினர்களை கொண்ட கிருஷ்ணகிரி மாநகராட்சி அமைப்புக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக 16 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக ஒரு வார்டிலும் வெற்றியை உறுதி செய்தது. அதிகபட்சமாக 21 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் 1 வார்டிலும் வெற்றி பெற்றது.

33 நகராட்சி வார்டுகளுக்கான தேர்தலில் திமுக 22 இடங்களையும் அதன் கூட்டணி கட்சி காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றது. அதிமுக 5 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற, 4 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

93 பேரூராட்சி வார்டுகளைக் கொண்ட கிருஷ்ணகிரியில், 59 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும், சி.பி.ஐ.எம். 1 இடத்திலும், சி.பி.ஐ கட்சி 2 இடத்திலும் வெற்றி பெற்றது. பாஜக ஒரு இடத்திலும், அதிமுக 15 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாநகராட்சித் தேர்தல்: திமுக சார்பாகப் போட்டியிட்ட திருநங்கை வெற்றி

சேலம்

60 வார்டுகளைக் கொண்டுள்ள சேலம் மாநகராட்சியில் 7 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக 47 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சி காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.

165 நகராட்சி வார்டுகளுக்கான தேர்தலில் அதிமுக 34 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 100 (96+4) வார்டுகளில் வெற்றி பெற்றது.

474 பேரூராட்சி வார்டுகளில் 4 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக 103 வார்டுகளில் வெற்றி பெற்றது. பாஜக 3 வார்டுகளில் வெற்றி பெற்றது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக 278 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் 13 இடங்களிலும் சி.பி.ஐ.எம். கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேமுதிக மற்றும் என்.சி.பி. தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றனர்.

நாமக்கல்

153 நகராட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக 29 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றது. திமுக 103 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றது. 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

294 பேரூராட்சி வார்டுகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுக 52 இடங்களில் வெற்றி பெற்றது. 218 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 இடத்திலும் வெற்றி பெற்றது. பாஜகவிற்கு ஒரு வார்டிலும் வெற்றி கிடைக்கவில்லை. 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

நீலகிரி

நீலகிரியில் உள்ள 108 நகராட்சி வார்டுகளில் 16 இடங்களை அதிமுக கைப்பற்றியது. திமுக 66 இடங்களிலும் இந்திய தேசிய காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றது. சி.பி.ஐ(எம்) கட்சி 3 இடங்களிலும் வெற்றியை உறுதி செய்தது.

186 பேரூராட்சி வார்டுகளில் 23 பேரூராட்சி வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. பாஜக 5 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது. சி.பி.ஐ.(எம்) 3 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக 105 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது.

திருப்பூர்

60 மாநகராட்சி வார்டுகளுக்கான தேர்தலில் 19 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக 24 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் 2 இடங்களிலும், சி.பி.ஐ. 6 இடங்களிலும், சி.பி.ஐ. (எம்) 1 இடத்திலும் வெற்றி பெற்றது.

147 நகராட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 92 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 9 (CPI (5) +CPI(M) (4))இடங்களிலும் வெற்றி பெற்றனர். பாஜக 3 இடத்திலும், அதிமுக 28 இடங்களிலும் வெற்றி பெற்றது.

233 பேரூராட்சி வார்டுகளுக்கான தேர்தலில் 19 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக 53 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றது. இடதுசாரிகள் 5 (CPI (1) +CPI(M) (4)) இடங்களில் வெற்றி பெற்றனர். 129 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-sweeps-the-western-region-of-tamil-nadu-in-urban-civic-polls-check-the-details-here-415458/