ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவு… சென்னையில் குறைந்த வாக்குப்பதிவு; முழு விவரம்

 20 2 2022 தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. கொரோனா தொற்று பதித்தவர்கள் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை வாக்களிக்கத்தனர்.

11 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில், அதிகப்பட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பேரூராட்சியில் 74.68 சதவீதமும், நகராட்சியில் 68.22 சதவீதமும், மாநகராட்சியில் 52.22 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு விவரங்கள்

தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றாலும், சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது. நெல்லை டவுன் மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நாகராஜன் என்பவரின் வாக்கு கள்ளத்தனமாக போடப்பட்டதை அறிந்த அதிகாரிகள்,தேர்தல் ஆணைய படிவம் 14-ஐ பூர்த்தி செய்து சேலஞ்ச் வாக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் சிறிய பிரச்னைகள் நடைபெற்ற போது காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்டினர் என டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். சுமார் 268 மையங்களில் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-civic-polls-held-peacefully-60-70-percentage-votes-414165/

Related Posts: