22 2 2022 இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 14,000-ற்கு கீழாக குறைந்துள்ளது.
தினசரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்படுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் புதியதாக 13,405 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 235 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், 34,226 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: திருமண வீட்டில் எதிர்பாராத சோகம்: 14 பேர் உயிரிழப்பு
மேலும் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 75 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், நாடு முழுவதும் இதுவரை 175 கோடியே 83 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
source https://news7tamil.live/india-low-corona-infection-below-14000.html