புதன், 16 பிப்ரவரி, 2022

உண்மைகளை மறைத்து வழக்கு..

 கோவை மாநகராட்சி 95வது வார்டில், பிரசாரம் செய்ய அனுமதி கோரி, பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், நீதிமன்றத்திற்கு உண்மைகளை மறைத்ததற்காக இப்ராகிமுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தது.

மனுதாரரின் கூற்றுப்படி, மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்காக அவர் பிரச்சாரம் செய்தார்.    

இதேபோல், கோவை மாநகராட்சி வார்டு 95ல் பிரசாரம் செய்ய சென்றபோது, ​​போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆளுங்கட்சியினரின் அழுத்தத்தால் தான் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

மனு விசாரணைக்கு வந்தபோது, ​​அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பதற்றமான பகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என மனுதாரருக்கு ஏற்கனவே காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால்’ இப்ராகிம் அதையும் மீறி, இதுபோன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்ய முயன்றதால், போலீசார் அவரை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது, என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  நீதிமன்றத்தில் உண்மைகளை மறைத்ததற்காக, இப்ராகிமுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/hc-dismissed-bjp-minority-wing-national-secretary-vellore-ibrahim-plea-412003/