24 2 2022 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாகவும், வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியபின் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் பணியிடங்களுக்கான 6 பணி நியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து போட வேண்டிய குழந்தைகளின் எண்ணிக்கை 57 லட்சத்து 41 ஆயிரம் உள்ளதாகத் தெரிவித்தார். 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ சொட்டு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளதாகவும், 696 இடங்களில் நடமாடும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், 12 வயது முதல் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அங்கீகரித்துள்ளதாக கூறிய அவர், வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். உக்ரைனில் மருத்துவம் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் உதவி தேவை என இதுவரை அணுகவில்லை எனவும், தூதரகங்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
source https://news7tamil.live/vaccine-for-people-over-12-what-are-the-guidelines.html