ரஷ்யாவை காக்க வேறு வழியில்லை: அதிபர் புதின்
25 2 2022
உக்ரைன் மீது படையெடுப்பதை தவிர, ரஷ்யாவை காக்க வேறு வழியில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இது தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கூறி ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ரஷ்யா – உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்து வரும் நிலையில் தற்போது தாக்குதல் நடத்ததத் தொடங்கி விட்டது. அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாகவும், ரஷ்ய ராணுவத்திற்கு பொதுமக்கள் இலக்கு அல்ல என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடைகள் குறித்து வணிக பிரதிநிதிகளுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உக்ரைனை ஆக்கிரமிப்பதைத் தவிர ரஷ்யாவுக்கு வேறு வழியில்லை என்று கூறினார். உலக பொருளாதார சீரழிவை ரஷ்யா விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/no-other-option-excerpts-of-putins-speech-declaring-war.html