ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

இஸ்லாமியர்கள் பற்றி தவறாக பேசியதாக நிரூபித்தால் மன்னிப்பு கேட்க தயார்: துரைமுருகன்

 19 2 2022 

Minister Duraimurugan Press Meet Update : தான் இஸ்லாமியர்கள் பற்றி தவறாக பேசவில்லை என்றும், அப்படி தவறாக பேசியது நிரூபிக்கப்பட்டால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார் என்று திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது பகுதிகளில் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாநகராட்சி காட்பாடி காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 9வது வார்டுக்கான பூத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது வாக்கை பதிவு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த பிரகாசத்தை மக்க வைக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோவை உள்ளிட்ட சில இடங்களில் கலாட்டா செய்து வருகினறனர். தமிழகம் முழுவதும் திமுக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. ‘

முல்லை பெரியாறு அணை கட்டுவோம் என்று சொன்னால் அது அரசாங்கமே சொல்வது போலத்தான் பொருள். இருக்கின்ற அனையே பலமாகத்தான் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சட்ட நுனுக்கங்கள் தெரிந்த பின்பும் நாங்கள் அணைக்கட்டுவோம் என்று சொல்வது அரசியல் சட்டத்தை மதிக்க மாட்டோம், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கமாட்டோம் என்று ஒரு ஆளும் கட்சி கவர்னார் வாயிலாக சொல்வது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. புதிய அணை கட்டுவதில் அவர்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்களே அதை விட ஆயிரம் மடங்கு அணை கட்டுவதை தடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கோதாவரி கிருஷ்ணா நதிநீர் இணைப்புக்கு கர்நாடகா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தெலுங்கானா எதிர்க்கிறது என்று கேட்ட கேள்விக்கு, அத அவர்கள் பிரச்சினை தண்ணீர் கொடுத்தால் நாங்கள் வரவேற்போம் என்று என்று கூறிய துரைமுருகன், நான் இஸ்லாமியர்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை யாரோ சிலபேர் விளம்பரம் தேடுவதற்காக செய்கிறார்கள் நான் இஸ்லாமியரைப்பற்றியோ இந்துக்களை பற்றியே ஒரு வார்த்தை பேசினேன் என்று சொல்ல சொல்லுங்கள் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார் என்று கூறியுளளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-duraimurugan-press-meet-about-controversial-speech-413909/