A lesson from the Mahabharata : பகடை ஆட்டம், திரௌபதியின் ஆடைகளை அகற்ற முயன்றது ஆகிய இரண்டு பேரழிவுகள்தான் மகாபாரதப் போருக்கு வழிவகுத்த நகர்வுகளாக அமைந்தன. அதற்கும் முன்னதாகவே ஒரு போருக்கு வழிவகுக்கக் கூடிய பல சம்பவங்கள் அன்றைய காலகட்டத்தின் அரச குலங்கள் மற்றும் ராஜ்ஜியங்களுக்கு இடையே நடைபெற்றன. போர்வீரர்கள் அவமதிக்கப்பட்டனர், பசுக்கள் சூறையாடப்பட்டன, நகரங்கள் அழிக்கப்பட்டன, பிரதிபா முதல் துரியோதனன் வரை பல தலைமுறைகளாக சாபங்கள் தொடர்ந்தன.
குடிபோதையில் சச்சரவு, சூதாட்டம் மற்றும் ஒரு பெண்ணின் கண்ணியத்துக்கு எதிராக அத்துமீறுவது, அந்த காலங்களில், அநேகமாக அசாதாரணமானது அல்ல. ஆயினும்கூட, நீண்டகால தொடர் நிகழ்வுகள் ஒன்றிணைந்து ஒரு சகாப்தத்தின் முடிவுக்கு வழிவகுக்க க் கூடிய ஒரு போரை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது. இந்தியா மீண்டும் அப்படியொரு தருணத்தை நோக்கி வேகமாகத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று யுகந்தா (Yuganta) என்ற புத்தகத்தை எழுதிய மானுடவியலாளரும் எழுத்தாளருமான ஐராவதி கார்வே அஞ்சுகிறார்.
ஒரு பெண்ணின் ஹிஜாபைக் கழற்றுமாறு கட்டாயப்படுத்திய கும்பல், அத்தகைய செயலின்போது அந்த ஆடையை அவிழ் என்ற சொல்லைப் பயன்படுத்த முடியுமா என்று சொல்வது கடினம். தனித்துவத்தைக் குறிக்கின்றன என்பதற்காகவோ அல்லது அதன் சீரான தன்மைக்காகவோ, சீருடை என்ற ஆடைக் கட்டுப்பாடு என்பது புதிய கருத்தாக்கம் அல்ல. மதகுருமார்கள், செவிலியர்கள் மற்றும் நீதிபதிகள், விடுதி, உணவகங்களின் ஊழியர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோர் உலகெங்கிலும் சீருடை எனும் ஆடைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகின்றனர். பல்வேறு மதக் குழுக்கள் தங்கள் குலம், சாதி, இனம், திருமண நிலை மற்றும் இறையியல் அடையாளத்தைக் குறிக்க தலைப்பாகை, தொப்பிகள், உலாக்கள், பச்சை குத்தல்கள், சிவப்பான குறியிடுதல், தாயத்துகள், தாலி மற்றும் நெக்லஸ் உள்ளிட்ட கழுத்தணிகளை அணியவோ பயன்படுத்தவோ செய்கின்றனர். குறியீடுகள் குறித்த மோதல்களின் போது அந்த குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.
மாணவர்களுக்கான சீருடை விவகாரத்தில் பிரான்ஸ் நாட்டின் உறுதியான நிலைபாட்டைப் போன்றதொரு நிலையைக் கொண்டு இந்தியா சமாளிக்க வேண்டும் என்று சட்டப் பேரறிஞர் ஒருவர் தெரிவித்தார். பிரான்சின் அரசியலமைப்பு சட்டமானது, பன்முகத்தன்மையை மையமாகக் கொண்ட “மாநிலங்களின் ஒன்றியம்” என்று பிரான்ஸை அங்கீகரித்திருக்கிறதா என்று நான் அவரிடம் கேட்டேன். ஐந்தாவது குடியரசு பகுதியளவு ஜனாதிபதியின் வரம்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தாலும், பிரெஞ்சு மனப்பான்மை இன்னும் பெரும்பாலும் ஜனாதிபதி வரம்புக்குட்பட்டதாகவே இருக்கிறது என்று அவர் பதில் அளித்தார்.
ஹிஜ்ஜாபை தடை செய்தால், பொது இடங்களில் மங்களசூத்திரம், புனித சிலுவை, பிண்டி மற்றும் தலைப்பாகை அணிவதை அதிகாரிகள் தடை செய்ய முடியுமா என்று அவரிடம் கேட்டேன்.அவர் அதன் பின்னர் ஹிஜ்ஜாப் பற்றிய விவாதத்தைத் தவிர்த்து விட்டார். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எளிதானவை அல்ல, முற்றிலும் சட்டத்தின் வரம்புக்குள்ளும் இல்லை. அவர்களை அங்கு முன்னெடுத்துச் செல்ல ஒரு தனிநபரின் சுயாட்சி மற்றும் சட்டத்தின் முறையான நோக்கம் ஆகியவற்றுக்கு இடையே விவாத சுற்றிலோ மற்றும் முடிவில்லா விவாதங்களுக்கு உள்ளோ நுழைய வேண்டும்.
சீருடை அல்ல வகுப்பறைதான் முக்கியம்
ஹிஜ்ஜாப் பிரச்னை என்பதானது ஒரு சீருடை குறித்து முடிவெடுக்கும் பிரச்னை என்பதாகவோ அல்லது தனிமனித சுதந்திரம் பற்றிய கோள்வியாகவோ நீண்டநாளைக்கு இருக்க முடியாது. இது வெறுமனே பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது அல்லது மறுப்பது மட்டுமான பிரச்னை அல்ல. இது வெறுமனே ஒரு வகுப்புவாதப் பகைமை பிரச்னை அல்ல. இவை அனைத்தும், வெளிப்படையாகத் தெரியும் கூறுகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதில் உள்ள மிக முக்கியமான மற்றும் பதட்டமான கூறு என்பது அதில் உள்ள அரசியல் குறியீடுதான். மொழியியலில் நன்கு அமைக்கப்பட்ட கோட்பாடு உள்ளது: எந்த ஒரு கருத்தாக்க பிரதிபலிப்பும் தனிப்பட்ட பொருளை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை. அனைத்து விதமான இதர கருத்தாங்களுக்கு மத்தியில் அதன் கருத்தாக்கத் திறனானது, இடத்தால் தீர்மானிக்கப்படுவதாக இருக்கிறது. .
அன்றைய அரசியல் கருத்தாக்கத்தின் எல்லைக்குள், ஹிஜ்ஜாப் பிரச்னை எங்கே, எப்படி வைக்கப்பட்டுள்ளது? இளைஞர்களைக் கொண்ட கும்பலின் அச்சுறுத்தலால் தப்பித்து ஓடும் தனி ஒரு பெண்ணின் அருகாமையில் இது வைக்கப்பட்டுள்ளது.”மர்யதா-புருஷ்” என்ற பெயரை மகிழ்ச்சியுடன் கோஷமிடும் அந்த கும்பலில் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்ல.. ஸ்தாபன அதிகாரம், நீதித்துறை மற்றும் சட்ட அமலாக்க முகமைகளுக்குப் பதிலாக இத்தகைய கும்பல்கள் அதிகார அமைப்பாக மாறிவிட்டன.
ஜனநாயகத்தின் தூண்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மாற்றாக அவர்கள் தூண்டப்படுகின்றனர் என பிரதமரால் வலுவாக சமிஞை செய்யப்படுகிறது. பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் பிரச்னைகளுக்கு பதிலளிக்கக்கூடாது என்று தீர்மானிக்கும் அவரால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய வரலாற்றின் தனது தனிப்பட்ட கருத்தைப் பற்றி பொருத்தமின்றி முடிவில்லாமல் பேசப்படுகிறது. மற்ற அரசியல் கருத்தாக்கங்கள் அந்த கருத்தை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன. சுதந்திரம் என்பது பிச்சையாகக் கிடைத்தது என்றும், ஜவஹர்லால் நேரு முதல் பிரதமர் அல்ல என்ற கருத்தும் நமக்குச் சொல்லப்படுகிறது.
வரலாற்றாசிரியர்களால் அசோகரில் தொடங்கி எழுதப்பட்ட இந்தியாவின் வரலாறு வரலாறு அல்ல, ஆரியவர்தாவை இழிவுபடுத்தும் சதி என்று நமக்குக் கூறப்படுகிறது.
வரலாற்றின் திருத்தத்துடன் சேர்த்து, அரசியலமைப்பின் பராமரிப்பிற்கு அவசியமான அனைத்து நிறுவனங்கள் அல்லது ஜனநாயக மரபுகளால் சட்டப்பூர்வமாக்கப்பட்டவற்றை வேண்டுமென்றே அழிப்பது கும்பல் வெறித்தனமும் கும்பல் நடவடிக்கையும் ஆகும். பாபர் மசூதி இடிப்பும், கோத்ராவுக்குப் பிந்தைய வகுப்புவாத வன்முறையும் கும்பல்களின் ஆட்சிக்கு இலக்கணம் வகுத்தது. ஒரு சிக்கலை உருவாக்கவும், இகழ்ச்சி மற்றும் வெறுப்பு உணர்வுகளை ரசிக்கவும், பெரும்பான்மை சமூகத்தை பயமுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்பவும், இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒரு வெளிச்சம் பரப்பவும் பின்னர் அந்த கும்பல்கள் கைப்பற்றவும் அனுமதிபடுகின்றன. .
தனிநபர் குற்றங்களையோ அல்லது சிறு குழு சதிகளையோ கையாள்வதில் அனுபவமும் விவேகமும் கொண்டதாக செயல்படும் நீதித்துறை, பெரிய கும்பல்களின் அக்கிரமத்தை கையாள்வதில் அதே திறமையை காட்டவில்லை.
ஆயிரம் ஆண்டு கால நாகரீக வரலாற்றுடன், வரலாற்றின் இத்தகைய ஆபத்தான திருப்பங்களைச் சமாளிக்க போதுமான ஆழமும் ஞானமும் இந்திய மக்களிடம் உள்ளது என நான் நினைக்கிறேன். எவ்வாறாயினும், அரசியலமைப்பில் பொதிந்துள்ள கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு முழு அமைப்பும் பொது மற்றும் தனியார் அறநெறிகளின் சட்டமியற்றுபவர்களாக தெருவில் சுற்றித் திரியும் கும்பலால் வீழ்த்தப்பட்டு அழிக்கப்படும். இத்தகைய நிலைமை எளிதில் உள்நாட்டுப் போராக சீர்குலைவை நோக்கிச் சென்று விடும். மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலானது, எவ்வளவு கொலைகாரத்தனமானக இருந்தது என்பதற்கான உடனடியான ஒரு முன்னோட்டத்தை நமக்குக் காட்டியுள்ளது.
உள்நாட்டுப் போர்கள், புரட்சிகளைப் போலல்லாமல், குறுகிய விவகாரங்கள் அல்ல. அவை பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக கூட பரவும் தன்மை கொண்டவை. உள்நாட்டு போர்களின் போது இருபுறமும் கருகி களைத்துப் போய் விடுகின்றனர். எந்தவொரு உள்நாட்டுப் போரும் எந்த ஒரு தரப்பிற்கும் வெற்றியாக முடிவதில்லை. அவர்கள் செய்வது எல்லாம் ஒரு நாட்டை ஒரு நாகரீக தேசமான அதன் பாதையில் ஓரிரு நூற்றாண்டுகள் தேக்கத்தை ஏற்படுத்தி பின்னோக்கி கொண்டு செல்வதுதான். இந்து ராஷ்டிராவை உருவாக்குவதும், கொள்ளை கும்பல்களின் ஆட்சியை உருவாக்குவதும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதை ஆர்எஸ்எஸ், பாஜக தெளிவாக மறந்துவிட்டன.
இந்து மதம் சுயக்கட்டுப்பாடு, ஒன்றியிருத்தல் போன்ற குணங்களுக்கு மிகவும் பிரபலமானது, எனவே ராமனை உலகளாவிய வழிபாட்டிற்கு தகுதியான கடவுளாக கருதுகிறது. மகாபாரதத்தில், கட்டாயமாக ஆடைகள் துகிலுறியப்பட்டு அவமானப்படும் ஒரு பெண்ணின் மானத்தை யாராலும் காப்பாற்ற முடியாத போது, கிருஷ்ணன் அவளுடன் நிற்கிறான். மகாபாரதத்திலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது, அனைத்திற்கும் மேலாக, தர்மம் மங்கும்போது, நீதியின் ஒரு புதிய வெளிப்பாடு எழுகிறது.
மேலும், மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறிய பிரபலமான வரிகள் இவைதான். அராஜகம் தலைவிரித்தாடும்போதும் ஆட்சியாளர்கள் தாங்கள் ஏன் அங்கு இருக்கிறோம் என்பதை மறந்துவிடும் காலங்களிலும் ராஜதர்மம் முக்கியமானது. அதுதான், உண்மையில் அங்கு செயல்படுகிறது .
இந்தக் கட்டுரை முதன்முதலில் கடந்த 16 ம் தேதியிட்ட அச்சுப் பதிப்பில் ‘Dharma under siege’ என்ற தலைப்பில் வெளிவந்தது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் ஒரு கலாச்சார ஆர்வலராவார்.
- தமிழில் – ரமணி
- source https://tamil.indianexpress.com/opinion/a-lesson-from-the-mahabharata-412812/