திங்கள், 21 பிப்ரவரி, 2022

சென்னையில் பயங்கரம்

 21 2 2022

சென்னையில் நேற்றிரவு பல்லவன் சாலையில் திமுக பிரமுகரை அடையாளம் தெரியாத இரண்டு பேர் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட 38 வயதான மதன், உள்ளாட்சித் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு தான் திமுகவில் இணைந்துள்ளார். அவர் தனது நண்பருடன் நேற்றிரவு பல்லவன் சாலையில் மன்றோ சிலை அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

சரியாக இரவு 10 மணியளவில், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பைக்கில் வந்த இருவர், மதனை வழிமறித்துள்ளனர். உடனடியாக அங்கிருந்து மதன் ஓட முயற்சி்த்துள்ளார். இருப்பினும், அந்த இரண்டு பேர் கும்பல் விரட்டிச்சென்று அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மதன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவரது உடலை உடற்கூராய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

குற்றவாளிகள் குறித்து எங்களுக்கு சில தடயங்கள் கிடைத்துள்ளன விரைவில் அவர்களைக் கைது செய்வோம் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

source https://tamil.indianexpress.com/tamilnadu/two-on-bike-hack-dmk-man-to-death-in-chennai-414394/