27 2 2022
Ukraine rejects Belarus as location for talks with Russia: ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் ஆனால் ரஷ்யாவின் 3-நாள் ராணுவ படையெடுப்புக்கு ஒரு தளமாக இருந்த பெலாரஸில் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்றும் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஒரு வீடியோ செய்தியில் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடனான பேச்சு வார்த்தைக்கு வார்சா, பிராட்டிஸ்லாவா, இஸ்தான்புல், புடாபெஸ்ட் அல்லது பாகுவை மாற்று இடங்களாக கூறியதோடு, மற்ற இடங்களும் சாத்தியம் என்று கூறினார், ஆனால் பெலாரஸில் பேச்சுவார்த்தை என்ற ரஷ்யாவின் தேர்வை உக்ரைன் ஏற்கவில்லை என்பதை உக்ரைன் அதிபர் தெளிவுபடுத்தினார்.
உக்ரேனிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய தூதுக்குழு பெலாரஸ் நகரான ஹோமலுக்கு வந்துள்ளதாக ரஷ்யாவின் அதிபர் மாளிகையான கிரெம்ளின் ஞாயிற்றுக்கிழமை கூறியது. தூதுக்குழுவில் இராணுவ அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் உள்ளதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
“ரஷ்ய தூதுக்குழு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது, நாங்கள் இப்போது உக்ரேனியர்களுக்காக காத்திருக்கிறோம்” என்று பெஸ்கோவ் கூறினார்.
வியாழன் அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது, ராணுவ துருப்புக்கள் வடக்கில் மாஸ்கோவின் நட்பு நாடான பெலாரஸிலிருந்தும், கிழக்கு மற்றும் தெற்கிலிருந்தும் உக்ரைனை தாக்கின.
source https://tamil.indianexpress.com/international/ukraine-rejects-belarus-as-location-for-talks-with-russia-417852/