செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு – ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்

 

ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன்பிறகு சேத்துப்பட்டில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயக்குமார், பின்னர் 12 மணி அளவில் எழும்பூரில் உள்ள ஜார்ஜ்டவுன் 15வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், எழும்பூர் ஜார்ஜ் டவுன் 15 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் தலைமையில் இந்த விசாரணையானது நடைபெற்றது.


விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடந்த வாதத்தில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கைது மனுவுக்கு எதிராக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர் இதில் போலீஸ் தரப்பில் கைது செய்யப்பட்ட மனுவை ஏற்று மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஜாமின் மனு மீதான விசாரணையை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை இது குறித்து விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்

source https://news7tamil.live/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af.html