பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஆனாலும், பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில், தமிழர்கள் அந்நாட்டு மக்களுடன் ஒற்றுமையாக வசித்து வருவது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த வோல்கர் சமீர் கே என்பவர், அந்நாட்டின் கராச்சி நகரில் வசிக்கும் தமிழ் மக்களைப் பற்றி வீடியோ ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், சமீர்’ கடவுள் வழிபாடு குறித்து கேட்டதற்கு’ தமிழர்கள் முருகன், சமயபுரம் மாரியம்மன் மற்றும் பல கடவுள்களை வணங்குகிறோம் என்று பதிலளித்தனர்.
பிறகு, சமீர் அவர்களிடம்’ பாகிஸ்தான் மக்கள் அவர்களை எந்த விதத்திலும் சித்திரவதை செய்கிறார்களா? என்று கேட்டதற்கு, பாகிஸ்தான் மக்கள் மிகவும் ஆதரவாகவும், இணக்கமாகவும் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையே ஏதேனும் சண்டை நடந்தால், அவர்கள் எங்களைப் பாதுகாப்பார்கள்,” பாகிஸ்தானில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நலமாக இருப்பதாக தமிழர்கள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட அனைத்து மக்களும் முஸ்லிம் சமூகத்தைப் பின்பற்றும் பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில், கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில்களையும் சமீர் தனது வீடியோவில் காண்பித்தார்.
அந்த இடத்தில் பாகிஸ்தான் மக்களுடன் சேர்த்து 1000க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்களும் வசித்து வருவதை வீடியோவை பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் பாகிஸ்தானியர்கள் கூட’ தமிழ் மொழியை தழுவி கேமரா முன் பேச முயற்சிப்பதையும் காண முடிந்தது.
இந்த வீடியோவை பார்த்த தமிழ் மக்கள்’ பாகிஸ்தானில் உள்ள தமிழர்கள் மீது தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் நிலவும் நிலையில்’ கராச்சியில் தமிழர்கள், பாகிஸ்தான் மக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழும் இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/tamil-community-residing-in-karachi-of-pakistan-video-viral-413639/