உலக சமூக நீதி தினம்:
இந்தியா மக்கள் தொகை அதிகமாக கொண்ட , மிகப்பெரிய ஜனநாயக நாடு. பல்வேறு மொழிகள் , மத நம்பிக்கைகளும், கொண்ட மக்களை உன்வாங்கிய மாபெரும் நாடு. இந்தியாவில் பல்வேறு இனங்கள் மொழிகள் இருந்தாலும், வேற்றுமையில் ஒன்றுமே என்ற அடிப்படையில் இந்திய சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்டம் அனைவர்க்கும் சமம் என்றாலும் சட்டப்படி உரிமைகள் வழங்குவதிலும், அமுல் படுத்துவதிலும் மாபெரும் அரசியல் மற்றும் இனவேறுபாட்டுடன் அரசாற்றுபவர்கள் செயல்படுவதையும், குறிப்பாக சிறுபான்மை சமூக மக்களை புறம் தள்ளுவதும், அவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி, அரசியல், பொருளாதார, வேலைவாய்ப் பிலும், முறையாக பிற சமூக மக்களுக்கு வழங்குவது போல் வழங்கவில்லை. மண்டல் கமிஷன் , சச்சார் கமிஷன் அறிக்கை படி முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வில்லை. இந்தியா முஸ்லிம்கள் , இந்திய சுதந்திரம் பெற வேறு எந்த சமூகமும் செய்யாத அளவில் தங்க உழைப்பு, பொருளாதாரம் கொண்டு இந்திய தேசம் சுதந்திரம் பெற போராடினார்கள். மகாத்மா காந்தி சொல்லை ஏற்று , ஒத்துழையாமை இயக்கத்தை பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை மேடையில் , இஸ்லாம் மார்க்கம் மட்டும் போதித்த மேடையில் , இந்தியா சுதந்திர போராட்ட உணர்வுகளை பிரச்சாரம் செய்தனர். விளைவு இந்திய முஸ்லிம்கள் கல்வியில் 100 வருடங்கள் பின்தங்கி உள்ளனர். இந்தியாவில் எந்தப்பகுதில் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை பலிக்கடாவாக்குவது எதார்த்தமானதாகிவிட்டது. சிறுபான்மை முஸ்லிம்களை ஒடுக்கும் நோக்கில் முஸ்லிம்கள் மீது ஏராளமான அடக்குமுறை சட்டங்களும் திட்டங்களும், செயல்படுத்தி வருகிறது. முஸ்லீம்கல் நாட்டின் கிடைக்கும் சலுகைக்காக காத்திருக்கும் எண்ணம் அவர்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை.முற்றிலும் உழைப்பை நம்பி வாழ்பவர்கள் முஸ்லிம்களுக்கும், சலுகை கல் சமூக பொருளாதாரத்தில், இடஒதிக்கீடு வழங்காவிட்டாலும் , சிறுபான்மை முஸ்லிம்களை துன்புறுத்தாமல் இந்திய தேசத்தில் வாழ விட்டால். அதுவே பெரிய சலுகை.
சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனசாட்சி உள்ள ஆட்சியாளர்கள் எதிர்காலத்தில் தோன்றினால். சிறுபான்மைச்சமூகத்திற்கு சம நீதி, கிடைக்கும்.
கட்டுரை : சே. ஹாஜி முஹம்மது ( சமூக ஆர்வலர் ) 20 2 2022