சனி, 26 பிப்ரவரி, 2022

கட்டுரை : போர் வேண்டாம் ரஷ்யா- உக்ரைன்

போர் 

இரு அண்டை நாடுகளுக்கு இடையில் போர்.   போர் என்றல், அமைதியை விரும்பும் நாடுகள், முதலில் சமாதான பேச்சுக்கு அழைப்பார்கள், பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டவில்லை என்றல், அமைதியை ஏற்காத நாட்டின் மீது பொருளாதார தடை விதிபார்கள். பொருளாதார தடை  யில் ஒரு நாடு தனிமை பட்டு எந்த ஒரு செயல் பாடுகளும் செய்ய முடியாத அளவில் முடங்கி, நாடும் நாட்டு மக்களும் முன்னேற்றம் இல்லாமல் நலிவுநிலைக்கு தள்ளப்படுவார்கள். நடக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் என்பது. ஒரு மாபெரும் வல்லரசான ரஷ்யா,ஐரோப்பிய கண்டத்தில்  மிகப்பெரிய நிலப்பரப்பு உள்ள  நாடு. ரஷ்யா பண்பாடடு,  கலாச்சாரம், மொழி, வரலாறு, நீண்ட நெடியது. குறிகிய  காலத்தில் நாடக உருவாக்கி, ஏகாதிபத்திய கொள்கையை சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு. பல நாடுகளில், அரசியல் , பிராந்திய குழப்பத்தை ஏற்படுத்தி,  நாடுகளை தன்வசப்படுத்தி , தன் படையையும், ராணுவ தளவாடங்களையும் அமைப்பதையே  ஒரே குறிக்கோளாக கொண்ட ஏகாதிபத்திய அமெரிக்காவை எதிர்க்க உலகில் உள்ள நாடுகள் முன்வரவேண்டும். அமைதியை விரும்பும் நடுகல் போர் செய்யும் எந்த ஒரு  நாட்டிற்கும் ஆதரவு தருவதை தவிர்க்கவேண்டும். இன்றைய காலகட்டத்தில் இரு நாடுகளுக்கிடையில் போர் என்றால் , வல்லரசு நாடுகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை பரிசோதிக்கவும், சந்தைப்படுத்தவும் ஒரு காலமாகவே  போரை பார்க்கின்றது. போரினால் விளையும் தீமைகளை யாரும் கணக்கில் கொள்வதில்லை. இதில் மிகவும் வர்த்தமான செய்தி என்ன வென்றல், வல்லரசு என்று சொல்லு நடுகல் கூட ஏகாதிபத்திய அமெரிக்கா வை எதிர்க்க திராணி இல்லமால்  அடிமைப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய சித்தாந்தமும் சர்வாதிகாரமும், உலகில் நீண்ட நாள் ஆட்சி  செய்ததில்லை என்பது வரலாறு . 

போர் வேண்டாம் ரஷ்யா- உக்ரைன். போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் . அமைதி மலர  - ஏகஇறைவனை பிரதிக்கும். 

கட்டுரை : சமூக ஆர்வலர் - சே. ஹாஜி முஹம்மது  (26/2/2022)