பெண் போலீஸ் அதிகாரியைத் தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் வழங்கிய அசாம் பார்பேட்டா மாவட்ட நீதிமன்றம், சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக அஸ்ஸாம் காவல் துறையை கடுமையாக சாடியது. போராடி வென்ற ஜனநாயகத்தை, போலீஸ் அரசாக மாற்றிவிடாதீர்கள் எனவும் அசாம் காவல் துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
மாநிலத்தில் நடந்து வரும் காவல்துறையின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டிய பார்பெட்டா மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி அபரேஷ் சக்ரவர்த்தி, காவல் துறையை மறுசீரமைக்க உத்தரவிடக்கோரி கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தை வலுயுறுத்தியது. போராடி கிடைத்த ஜனநாயகத்தை போலீஸ் அரசாக மாற்றுவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால், இதை அஸ்ஸாம் காவல்துறை யோசித்தால், அது வக்கிரமான சிந்தனையாகும்.
சட்டம் ஒழுங்குப் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு காவல்துறையினரும் பாடி கேமராக்களை அணிய வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்யும்போது அல்லது குற்றம் சாட்டப்பட்டவரைப் பொருட்கள் அல்லது பிற காரணங்களுக்காக சில இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் போன்றவற்றை நடைமுறைபடுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பரீசிலிக்க வேண்டும்
இந்த நடவடிக்கையாது, தற்போது ஒருவர் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்வதிருக்கும் போன்ற நிகழ்வை தடுக்கவும், நள்ளிரவில் போலீஸ் கஸ்டடியில் இருந்து குற்றவாளி தப்பிக்க முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மையை கண்டறியவும், குற்றவாளிகள் மீது தாக்குதல் அல்லது தூப்பாக்கிச் சூடு நடத்தும் காவல் துறையின் வழக்கமான நிலையை ஆராயவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
கடந்த மாதம் அஸ்ஸாம் சட்டசபையில் பகிரப்பட்ட தரவுகளின்படி, 2021 மே மாதம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா பொறுப்பேற்றதில் இருந்து 29 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். 96 பேர் காயமடைந்துள்ளனர்
மேவானியின் வழக்கறிஞர் ஆங்ஷுமான் போரா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, மேவானிக்கு 1,000 ரூபாய் தனிப்பட்ட அங்கீகார (பிஆர்) பத்திரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சில பிராசஸ் மீதம் இருப்பதால், அவர் மீண்டும் கோக்ரஜார் அழைத்து செல்லப்பட்டுள்ளார். நாளை விடுவிக்கப்படுவார். இவ்வழக்கில் நீதிமன்றம் வலுவான உத்தரவை வழங்கியுள்ளது. இது பொய்யான வழக்கு. அவரைக் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றவில்லை என வாதாடுனேன். நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டது என்றார்.
கடந்த செப்டம்பரில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த சுயேச்சை எம்.எல்.ஏ மேவானி, ஏப்ரல் 20 ஆம் தேதி நள்ளிரவில் குஜராத் மாநிலம் பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் அவரை அசாம் போலீசார் கைது செய்தனர். அவர் அடுத்த நாள் காலை, கவுஹாத்தி செல்ல திட்டமிட்ருந்தார். பிரதமர் நரேந்திர மோடியை கோட்சேவுடன் தொடர்பு படுத்தி டுவிட்டரில் பதிவிட்டது தொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஏப்ரல் 25 ஆம் தேதி, மேவானிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மணிநேரங்களில் ஜிக்னேஷ் மேவானியை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
பெண் காவல்துறை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், பார்பேட்டா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
பெண் போலீஸ் புகாரில், ஏப்ரல் 21ம் தேதி கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து கோக்ரஜாருக்கு அரசு வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது, அவதூறான வார்த்தைகளில் திட்டியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்து இருக்கையில் தள்ளியதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. வழக்குப்பதிவின்படி, வாகனத்தில் கூடுதலாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் இருந்துள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம்சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு விவரங்கள் ஒத்துப்போகவில்லை. இவ்வழக்கு சம்பந்தப்பட்ட நபரை, நீண்ட காவலில் வைக்க திட்டமிட்டது போல் தெரிகிறது. நீதிமன்றம் மற்றும் சட்டத்தின் செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதற்கு எச்சரிக்கை வடுத்தனர். இரண்டு ஆண் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை தாக்க எந்த ஒரு விவேகமுள்ள நபரும் முயற்சிக்க மாட்டார்கள். குற்றச்சாட்டப்பருக்கு மனநிலை சரியில்லை என வழக்குப்பதிவில் எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்தது.
மேவானி கூற்றுப்படி, “இந்த கைது பிரதமர் அலுவலகத்தில் திட்டமிடப்பட்ட ஒரு “சதி”. தித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. னக்கு ஜாமீன் கிடைத்துவிடும். இன்று இல்லாவிடில், நாளை கிடைக்கும்.
பாஜக அரசாங்கத்தாலும், பிரதமர் நரேந்திர மோடியாலும் நீரவ் மோடி, மெகுல் சோக்சி அல்லது விஜய் மல்லையாவை கைது செய்ய முடியவில்லை. ஆனால், மேவானியை கைது செய்து குஜராத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள அசாம் சிறையில் அடைக்க முடியும்.
சந்திரசேகர் ஆசாத், அகில் கோகோய், ஹர்திக் படேல், கன்ஹையா குமார் மற்றும் இதர இளைஞர் தலைவர்களைப் போலவே நானும் பாஜகவால் குறிவைக்கப்பட்டேன், ஆனால் நாங்கள் யாரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக பேசுவதை நிறுத்தபோவதில்லை. ஜூனியர் அதிகாரியுடன் கைகலப்பில் ஈடுபட்டு நான் என்ன சாதிப்பேன்? போலீசார் என்னை காவலில் எடுத்தனர், என்னை விசாரிப்பது அவர்களின் வேலை, நான் அவர்களுக்கு ஒத்துழைத்தேன்” என்றார்.
source https://tamil.indianexpress.com/india/jignesh-mevani-bail-assault-case-gujarat-mla-447806/