சனி, 9 ஜூலை, 2022

திராவிட நாடு கோரிக்கை பயணித்த பாதை

 

திமுக எம்பி ஆ. ராசா, சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் “ எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள். தனித்தமிழ்நாடு கேட்கும் நிலைக்கு எங்களை கொண்டு செல்லாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள்” என்று முதலமைச்சர் முந்நிலையில் பேசினார்.  மேலும் இவர் பேசிய வீடியோவை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயகம் முக்கியம் என்று பதிவிட்டிருந்தார்.

தனித் தமிழ்நாடு கோரிக்கை என்பது நீண்ட வரலாறு கொண்டது.  பெரியார்  சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி, தமிழ் இனத்தின் அடையாளத்தையும் சுயமரியாதையும் மீட்க போராடினார்.  இவர்தான் ’திராவிடா நாடு’ அதாவது தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழி பேசுபவர்கள் உள்ளடக்கிய தமிழ்நாடு என எதிர்கால கனவை முன்வைத்து திராவிட கழகத்தை தொடங்கினார்.  

மெட்ராஸ் மாகாணத்தின் கடைசி முதலமைச்சரும் மற்றும் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சருமான அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். பெரியாரின் தனித்தமிழ்நாடு கொள்கைக்கு எதிராக அண்ணாதுரை இருந்ததால், அவர் திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கி, மற்ற மாநிலங்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவு செய்தார்.

தனித் ‘திராவிட நாடு’  கோரிக்கை கடந்து வந்த பாதை

தனித் திராவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கை பல நிலைகளை கடந்து வந்திருக்கிறது. நடேச முதலியார், டி.எம்.நாயர், பிட்டி தியாகராய செட்டியும்  1917 ம் ஆண்டில்  நீதிக் கட்சியை தொடங்கினர். சமூகபடிநிலையில் பிராமிணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக நீதிக் கட்சி போர்கொடி தூக்கியது. அரசு வேலைகளிலும், முக்கிய பதவிகளிலும் பிராமிணர்களின் எண்ணிக்கை அதிகாமாக இருந்தது.

இந்நிலையில் 1920ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக் கட்சி வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி அத்தேர்தலை புறக்கணித்தது. 1926ம் ஆண்டு வரை நீதிக் கட்சி  ஆட்சியில் இருந்தது. மீண்டும் 1930 முதல் 1937 வரை ஆட்சியில் இருந்தது.

சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய பெரியார், 1938ம் ஆண்டு நீதிகட்சியுடன் இணைந்து 1944ம் ஆண்டு திராவிட கழகத்தை உருவாக்கினார். திராவிட கழகத்தின் முக்கிய கொள்கையாக சனாதான எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு என்பதை முன்வைத்து தனி திராவிட நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே இருந்தது.

சுதந்திரம் கிடைத்த பிறகு. திராவிட கழம் திரவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே நகர்ந்தது. தேர்தலில் கலந்துகொள்ள பெரியார் விரும்பவில்லை. 1949ம் ஆண்டு கருத்துவேறுபாட்டால், பிரிந்து சென்ற அண்ணாதுரை திமுகவை உருவாக்கி, தேர்தலில் பங்கேற்றார். திமுக மேடைகளில் சமூக நீதி மற்றும்  தமிழ் தேசியம் பேசப்பட்டது. ஆனால் தீராவிட நாடு தொடர்பாக அண்ணாதுரை அமைதியாகவே இருந்தார். 1967ம் ஆண்டு அவர் முதலமைச்சரானார்.

மொழி தேசியவாதம்

நாம் இன்று மொழிவழி மாநிலமாக பிரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தது பொட்டி ஸ்ரீராமுலுதான். விடுதலை வீரரான இவர் 1952ம் ஆண்டு 56 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். இவர் தனி தெலுங்கு மாநிலம் வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரத்தின் இறுதியில் இவர் மரணமடைந்தார். இது பெரும் கலவரத்தை உருவாக்கியது. கலவரத்தை தடுக்க துப்பாக்கிசூடு நடைபெற்றது. பொதுமக்களின் கோவத்தை எதிர்கொள்ள இயலாமல் அப்போதைய பிரதமர் நேரு ஆந்திர மாநிலம் உருவாக்க ஒப்புக்கொண்டார். இதித்தொடர்ந்து மொழி விழி மாநிலங்கள் உருவாகின. இதனால் திராவிட நாடு உருவாகும் திட்டம் மேலும் செயலிழந்தது.

தமிழ் மொழி மீட்பு

1967ம் ஆண்டு முதல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும் காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகிறது. தமிழ்நாடு மும்மொழி கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்பட்டாலும், இந்தி எதிர்ப்பு போராட்டம்  நடைபெற்றது.

அண்ணாதுரை ராஜ சபையில் 1962ம் ஆண்டு பேசியபோது “ நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம். இங்கே இருக்கும் உறுப்பினர்கள் ஆங்கிலம் தெரிந்தபோதும், இந்தியில்தான் பேசுகிறார்கள். இந்தியில்தான் பதிலை எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்றால், எங்களைப் போன்றவர்கள் இந்தியை கற்றுகொள்ள வேண்டும் இல்லாவிட்டால், அமைதியாக இருக்க வேண்டும்.” என்று கூறினார்.

2018ம் ஆண்டு தமிழ்க சட்டசபையில் ஸ்டாலின் பேசியபோது, தெற்கு மாநிலங்களை உள்ளடக்கிய திரவிட நாடு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் நான் ஆதரவளிப்பேன் என்று கூறினார்.  

மேலும் அவர் கூறுகையில் ‘திரவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. தெற்கு மாநிலங்களை பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மூலம் அண்ணா சொன்னது சரி என்று தோன்றுகிறது” என்று கூறினார்.  

செய்தி: ரிஷிகா சிங்

source https://tamil.indianexpress.com/explained/a-short-history-of-the-demand-for-dravida-nadu-its-evolution-476213/

Related Posts:

  • மத மாற்றத் தடை சட்டம் மத மாற்றத் தடை சட்டமும் பாதிக்கப்போகும் சங்கபரிவாரும் ஐ.அன்சாரி மாநிலச்செயலாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 04-02-2022 … Read More
  • இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்காது குத்தக் கூடாது என்ற தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக அதன் சில நிர்வாகிகள் தாயிகளின் குழந்தைகளுக்கு காதுகுத்துவது சரியா? இஸ்லாம் ஓர் எ… Read More
  • வெறுப்பை விதைக்கிறதா ஏகத்துவம்?வெறுப்பை விதைக்கிறதா ஏகத்துவம்? Veruppai vidhaikkiratha egathuvam உரை : எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மேலாண்மைக்குழுத் தலைவர், TNTJ) மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜு… Read More
  • வழிகெட்ட கொள்கைகள்!வழிகெட்ட கொள்கைகள்! Valiketta kolkaikal \ VAZIKETTA KOLKAIKAL உரை: K.M.அப்துந் நாஸிர் M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ ) பெரம்பலூர் மாவட்டம்… Read More
  • மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்! மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்! S.A முஹம்மது ஒலி M.I.Sc (மாநிலச் செயலாளர்-TNTJ) மாநிலத் தலைமையகம் ஜுமுஆ உரை - 24.02.2022 … Read More