தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயத்தை இப்போது பார்ப்போம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கைக்கான கவுன்சிலிங் செயல்முறை நடந்து வருகிறது. தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது.
இந்தநிலையில், மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவலை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் முதலில் கவனிக்க வேண்டியது, அந்தக் கல்லூரியின் தேர்ச்சி சதவீதம் தான். சில கல்லூரிகள் கவுன்சிலிங்கில் 100% இடங்களை நிரப்பியிருக்கும், ஆனால் தேர்ச்சி விகிதம் 50%ஐ தாண்டியிருக்காது. கேம்பஸ் இண்டர்வியூக்கு வரும் நிறுவனங்கள் முதலில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளாரா என்பதைத் தான் முதல் அளவுகோலாக வைத்திருக்கும்.
எனவே கல்லூரியை தேர்வு செய்யும் முன் தேர்ச்சி சதவீதத்தை கவனியுங்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் கல்லூரிகள் இடங்களை நிரப்பிய அளவையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
எந்ததெந்த கல்லூரி எவ்வளவு தேர்ச்சி சதவீதத்தைக் கொண்டுள்ளன என்பதை கீழ்கண்ட காணொலி மூலம் தெரிந்துக் கொள்ளலாம். கூடுதலாக கடந்த ஆண்டில் அந்த கல்லூரிகளின் சேர்க்கை விகிதத்தையும் இந்த வீடியோவில் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீதமும் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2023-tamil-nadu-engineering-college-pass-percentage-details-719824/