டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
குறிப்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
மேலும் மாநிலங்களவையில் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து வெற்றி பெற்றால் 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக பாஜகவை வென்றது போல் இருக்கும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாஜகவை வீழ்த்த இது ஒரு நல்ல வாய்ப்பு.” எனவும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் பல கட்சிகள் ஆம்ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தது.
இதனால், நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டத்தை ஆம்ஆத்மி புறக்கணிக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில், அவசரச் சட்ட விவகாரத்தில் ஆத்ஆத்மி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் ஊடகப்பிரிவுத்தலைவர் பவான் கேரா கூறுகையில், டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை காங்கிரஸ் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/the-emergency-act-brought-by-the-central-government-in-delhi-congress-supports-aap.html