திங்கள், 17 ஜூலை, 2023

சாதியும் போதையும் ஒழிக்கப்பட வேண்டும்!” – திருமாவளவன்

 

ஊழலை விட சமூகத்தை பயங்கரமாக பாதிக்க கூடிய சாதியும் போதையும் ஒழிக்கப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ( DYFI ) போதையற்ற தமிழ்நாடு – ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் நிறைவு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

தமிழ்நாடு மட்டும் இல்லாமால் ஒட்டுமொத்த இந்தியாவும் போதை இல்லாத நாடக மாற வேண்டும். போதை இல்லாத சமூகம் மாற வேண்டும் என்பது ஒவ்வொருக்குமான கடமை இது. மாநில அரசும் மத்திய அரசும் போதை பொருள் தடுப்பு சட்டத்தை இயற்றுகிறார்கள் ஆனால் போதை பொருள் புழுகத்தில் இருப்பதை தடுக்க முடியவில்லை.

மதுவுக்கு பின்னால் விளம்பரத்தை எழுதி விட்டு மது விற்க்கும் நிலைமை உள்ளது. மேலும் பிடி, சிகிரட் போன்ற அட்டைகளில் உடல் நலத்துக்கு கேடு என்று வசனங்கள் போடப்பட்டும் விற்பனை நடைபெறுகிறது. அதேபோல் திரைப்படங்களில் அந்த காட்சியை அமைக்க கூடாது. ஆனால் மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு என்ற வாசகத்தை போட்டு கொண்டால் மது பயன்பாடு காட்சிகளை காட்டலாம் என்ற விதிவிலக்கு இருக்கிறது.

இப்படிப்பட்ட சமரச போக்கு மேல் இருந்து கிழ் வரை உள்ளது, தடுப்பதற்கு சட்டங்கள் இருந்தும் அதை தடுக்க முடியவில்லை. அரசு ஏன் மதுக்கடைகளை திறக்க வேண்டும் அதை மூடுவது தான் சாரி என்று விவாதித்தால், அரசு மதுக்கடைகளை முடினால் கள்ளச் சாராயம் பெருகும் என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதுமும் இல்லை. உயிரிழப்பு ஏற்படும் அதில் இருந்து காப்பற்ற தான் அரசு மதுகடைகளை திறக்கிறது என்ற நியாயம் சொல்லப்படுகிறது.

அகில இந்திய அளவில் இது தொடர்பாக தேசிய கொள்கை வரையறுக்கப்பட வேண்டும். போதை பொருள் வியாபாரம் என்பது உலகளாவிய மாஃபியாக்கள் கையில் உள்ளது. பள்ளிகளின் வாசலில் கஞ்சா கிடைக்கிறது, உலகம் முழுவதும் இதை உற்பத்தி செய்யும் கும்பல் மாபியா. அவர்கள் நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் கடத்துகிறார்கள்.

இளம் தலைமுறையினர் இதனால் கடுமையாக பாதிக்கப்டுகிறார்கள். அதை கட்டுப்படுத்த முடியவில்லை நிறைய பேர் திருமணம் செய்ய முடியாமல் குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் சூழல் உள்ளது. அனைத்து வகை போதை பொருள் பழக்கத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

ஊழலை விட சமூகத்தை பயங்கரமாக பாதிக்க கூடியவை ஒன்று சாதி அதை ஒழித்தாக வேண்டும், வேறு ஒன்று போதை அதை முற்றிலும் அழிக்க வேண்டும். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசினார்.

source https://news7tamil.live/caste-and-addiction-must-be-eradicated-thirumavalavan.html