15 7 23
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் தேதிகளை மருத்துவ ஆலோசனை குழு வெளியிட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2023–24 ஆம் ஆண்டுக்கான கவுன்சிலிங் அட்டவணையை மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) வெளியிட்டுள்ளது. ஜூலை 20 முதல், முதல் சுற்றுக்கான பதிவு திறக்கப்படும்.
இந்தநிலையில், மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த ஆண்டு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET UG) கவுன்சிலிங் 2023 இல் மீதமுள்ள காலியிட சுற்றுக்கு (துணைக் கலந்தாய்வு) பதிவு செய்ய தகுதி பெற்றுள்ளனர். இது முந்தைய சுற்று கவுன்சிலிங்கில் அனுமதிக்கப்படவில்லை.
மத்திய, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் (AIIMS) மற்றும் பிற மத்திய நிறுவனங்களில் உள்ள அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்களின் 15% இடங்களுக்கு, NEET UG கவுன்சிலிங்கை MCC நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள் MCC இல் பதிவு செய்வதோடு கூடுதலாக NEET UG கவுன்சிலிங் 2023 மீதமுள்ள காலியிடச் சுற்றில் தேர்வுகளை நிரப்பலாம். கடந்த ஆண்டுக்கு முன்பு வரை, இறுதிச் சுற்று கவுன்சிலிங், மாப்-அப் சுற்றில் தேர்வர்கள் எடுத்த முடிவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டது.
NEET UG கவுன்சிலிங் 2023: முக்கிய மாற்றங்கள்
விண்ணப்பதாரர்கள் மீதமுள்ள காலியிடங்களின் சுற்றுக்கு பதிவு செய்து பணம் செலுத்த முடியும். பதிவுக்காக போர்ட்டல் மூன்று நாள் திறந்திருக்கும்.
கூடுதலாக, மாணவர்கள் மீதமுள்ள காலியிடங்களின் சுற்றில் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு சாய்ஸ் ஃபில்லிங் செய்ய முடியும்.
இருக்கை ஒதுக்கீடு செயல்முறைக்கு முன், உள் விண்ணப்பதாரர்களை சரிபார்ப்பதற்குப் பதிலாக, அறிக்கையிடல் செயல்முறைக்குப் பின், இணைந்த விண்ணப்பதாரர்களை நிறுவனங்கள் சரிபார்க்கும்.
ஒதுக்கப்பட்ட நிறுவனத்தில் சேர்வதற்கு முன், MCC போர்ட்டலில் தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்படும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/neet-counseling-2023-mcc-allows-stray-vacancies-to-all-mbbs-applicants-723400/