ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்முறை, கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் எனவும், மத்திய, மாநில அரசுகள் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு இடைவிடாத ஆட்சியை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதால் நேரம் மிச்சப்படும், பெரும் செலவு தவிர்க்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,இது நாட்டின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இது நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முக்கியமான நடிவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகிறேன்.
இவ்வாறு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
source https://news7tamil.live/aiadmk-supports-one-country-one-election-policy-edappadi-palaniswamis-opinion-to-strengthen-the-federal-system.html