1 9 23
பாஜகவை INDIA கூட்டணி முழுமையாக தோற்கடிக்கும் என தான் நம்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ், திமுக உள்பட 28 எதிா்க்கட்சிகளைக் கொண்ட ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை தொடங்கி, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீட்டை உடனடியாகத் தொடங்கி விரைவில் முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாக இணைந்து போட்டியிடுவது என இந்தியா கூட்டணி மிக முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. தொடர்ந்து, மக்களின் பிரச்னைகளை கையிலெடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மும்பையில் நடைபெற்ற இந்த INDIA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி செய்தியளார்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:
பாஜகவை இந்தியா கூட்டணி முழுமையாக தோற்கடிக்கும் என நம்புகிறோம். தொகுதி பங்கீடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டணி கட்சி தலைவர்கள் இடைய நல்லிணக்கத்தை இந்த கூட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன.
நான் லடாக்கில் ஒரு வாரம் கழித்தேன். நான் சீனர்கள் இருக்கும் இடத்திற்கு முன்னால் உள்ள பாங்காங் ஏரிக்குச் சென்றேன். சீனா இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டது என்று லடாக் மக்களே சொல்கின்றனர். இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, லடாக் மக்களுக்கும் மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது. ஜி20 மாநாடு நடக்கும் நிலையில், பிரதமர் மோடி மௌனம் கலைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
source https://news7tamil.live/bjp-india-alliance-to-be-completely-defeat-rahul-gandhi-speech-in-mumbai.html