ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

பொய்களை பரப்பும் மேற்கத்திய அடிமைகளுக்கு இந்தஉண்மை எல்லாம் தெரியுமா..??

ஹிஜாப் பெண்ணடிமைத்தனம்என்று பொய்களை பரப்பும் மேற்கத்திய அடிமைகளுக்கு இந்தஉண்மை எல்லாம் தெரியுமா..??எகிப்தைச் சேர்ந்த மர்வா ஷெர்பினி தனது பாடசாலைக் காலம் முதல் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும்விளங்கியவர்...1992 முதல் 1999 வரை எகிப்தின் தேசிய கரப்பந்தாட்ட அணியில் அங்கம் வகித்த மர்வா மருந்தாளர் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்...2005ம் ஆண்டு அலி உக்காஸ் எனும்மரபணுப் பொறியியலாளரை திருமணம் செய்த இவர் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்தார்...ஜெர்மனியில் வசித்த காலத்தில் ஏனைய முஸ்லிம்களோடு இணைந்து இஸ்லாமிய கல்விக்கும் கலாசாரத்திற்குமான நிறுவனமொன்றை ஆரம்பித்தார்.இவரது சமய, கலாசார நடவடிக்கைகள் அதிதீவிர வலதுசாரி கிறிஸ்தவர்களிடையே பெரும் காழ்ப்புணர்வை தோற்றுவித்திருந்தன...2008 ஆகஸ்ட் மாதம் ட்ரெஸ்டன் நகரிலுள்ள சிறுவர் பூங்காவில் மகன் முஸ்தபாவுடன் மர்வா விளையாடிக் கொண்டிருந்தார்...அப்போது அங்கு வந்த ரோமன் கத்தோலிக்கப் பண்பாட்டில் ஊரிய அலெக்ஸ் என்பவன் மர்வா தனது உடலை மறைத்து ஹிஜாப் அணிந்திருந்தமையை பொறுக்க முடியாது அவர் மீது கீழ்த்தரமான அவதூறுகளைச் சுமத்தினான்...இழிசொற்களால்அவமானப்படுத்தினான்...இன்னும் தீவிரவாதி என்றும் நடத்தை கெட்டவள் எனவும் தூற்றினான்...இதனால் மனமுடைந்த மர்வா தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மாவட்ட நீதிமன்றத்தில் அலெக்ஸ்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்...இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில்780யூரோக்களை அபராதமாக செலுத்துமாறு அலெக்ஸ்க்கு உத்தரவிட்டது...ஆயினும் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து அலெக்ஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தான்...இம்மனு மீதான விசாரணை 2009 ஜூன் முதலாம் திகதி இடம்பெற்றது...அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாத சந்தர்ப்பத்தினைபயன்படுத்திக கொண்ட அலெக்ஸ் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் "நீ இனிமேல் உயிர் வாழத் தகுதியற்றவள்" எனக்கூறியவாறே மர்வா ஷெர்பினி மீது பாய்ந்து 18 தடவை அவரை கத்தியால் குத்தினான்...அப்போது மர்வா மூன்று மாதக் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது..தனக்கு முன்னால் தனது மனைவி கத்திக் குத்துக்கு உள்ளாக்கப்படுவது கண்டு அதிர்ச்சியுற்ற உக்காஸ் மர்வாவைக் காப்பாற்ற முழு முயற்சி செய்தார்...இதன் போது உக்காஸும் காயங்களுக்குள்ளானார்...தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தினர்...குண்டுகள் அலெக்ஸ் மீது பாய்வதற்கு பதில் உக்காஸ் மீதே பாய்ந்தன...உக்காஸ் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்...தனது தாயும் தந்தையும் தன் கண் முன்னே இரத்தம் சிந்துவதை மூன்றே வயதான முஸ்தபா பார்த்துக் கொண்டிருந்தான்...நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்ற இவ் அசாதாரண சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை பொது மக்களிடையே ஏற்படுத்திய போதிலும் ஜேர்மனிய ஊடகங்கள் இதனை மிகச் சாதாரண சம்பவமாகவே அறிக்கை செய்தன...இப்படுகொலையினை அறிந்து எகிப்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் ஜேர்மனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...ஜேர்மனியின் மத்திய முஸ்லிம் கவுன்ஸில்மர்வாவின் படுகொலையானது மேற்கில் வளர்ந்து வரும் இஸ்லாம் பற்றிய அச்சத்தின் வெளிப்பாடு என கண்டனம் செய்தது...இந்த சகோதரியின் தியாகத்திற்காக இந்த சகோதரியை நினைவு கொள்ளும் வகையில் உலக ஹிஜாப் தினமாக செப்டம்பர் 4 உலகம் முழுவதும் வருடா வருடம் அனுசரிக்கப்பட்டு வருகிறதுஹிஜாப் பெண்ணடிமைத்தனம்என்று வாய்கிழிய பொய்களை பரப்பும் போலியான பெயர்வளிகளுக்குஇந்த உண்மைகள் எல்லாம்தெரியுமா என்று தான் தெரியவில்லை...இந்த சகோதரி அநீதமாக கொல்லப்பட்டது ஒன்றும் முஸ்லிம் நாட்டில் இல்லை...மாறாக கலாட்சாரத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களை தாங்களே போலியாக புகழ்ந்து கொள்ளும் ஐரோப்பிய நாட்டில் தான்...இந்த சகோதரியை ஹிஜாப் அணிய வர்புறித்தியது யார்...ஹிஜாபுக்கு எதிராக அவதூறாக பேசிய அந்த கயவனுக்கு எதிராக வழக்கு தொடுக்க வைத்தது யார் ?எங்கோ அரபு நாட்டில் இருந்து வந்த தீவிரவாதிகளா ?நிட்சயம் இல்லை மாறாக ஹிஜாப் என்பது பெண்களின் கண்ணியம் அவர்களின் பாதுகாப்பு...அதற்காகத்தான் அந்த சகோதரி எந்த கயவனுக்கு எதிராக போராடினார் , வழக்கும் தொடுத்தார்...இதற்காகவே அந்த சகோதரி உயிர் நீர்த்தார்...ஆனால் வழக்கம் போல எந்த ஒரு கேடுகெட்ட ஊடகமும் இந்த உண்மையை மக்கள் மன்றத்தில் கூறவே இல்லை...மாறாக மறைத்தார்கள்...ஆனால் அதே நேரத்தில் ஹிஜாப் பெண்ணடிமைத்தனம்என்று பொய்களின் மூலம்பரப்பவும் வெக்கப்படுவதும்இல்லை...இதுதான் கேடுகெட்ட மேற்கத்திய அடிமை ஊடகங்களின் பத்திரிக்கை தர்மம்...இஸ்லாம் மக்கள் மனங்களில் ஊடகங்களின் மூலம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கமாகவே உள்ளது...இஸ்லாத்தை பற்றி விமர்சனம் செய்யும் பலரின் செயல்பாடும் பொய்களை மட்டும் அடிப்படையாக கொண்ட ஊடகங்களின் செய்திகளின் அடிப்படையில் என்பதே எதார்த்தமான உண்மையும் கூட...இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள சரியான அளவுகோல் திருக்குரான் மட்டுமே

Related Posts: